| திருப்பதி செல்லும் ரயில் ஜோலார்பேட்டையில் நிற்கும் Dinamalar
திருப்பதி செல்லும் ரயில் ஜோலார்பேட்டையில் நிற்கும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
00:12

திருப்பூர்:'கோவை - திருப்பதி ரயில் ஜோலார்பேட்டையில் நின்று செல்லும்,' என, சேலம் கோட்டம் தெரிவித்துள்ளது.வாரத்தின் நான்கு நாட்கள் காலை, 6:00 மணிக்கு கோவையில் புறப்படும் கோவை - திருப்பதி எக்ஸ்பிரஸ், திருப்பூர், ஈரோடு, சேலம், காட்பாடி, சித்துார் வழியாக பயணித்து, மதியம், 2:30 திருப்பதி சென்றடைகிறது.நடப்பாண்டு பிப்., முதல் ஆக., 15 வரை இந்த ரயில் ஜோலார்பேட்டையில் நின்று சென்ற நிலையில், மறு அறிவிப்பு வராததால், ரயில் சேலத்தில் இருந்து புறப்பட்டு நேராக காட்பாடி சென்றது; ஜோலார்பேட்டையில் நிற்கவில்லை.இதனை அறிந்த சேலம் ரயில்வே கோட்டம், 'மறுஅறிவிப்பு வரும் வரை அடுத்த ஆறு மாதத்துக்கு கோவை - திருப்பதி ரயில் இருமார்க்கத்திலும் ஜோலார்பேட்டையில் நின்று செல்லும்,' என தெரிவித்துள்ளது. இதனால், பயணிகள் நிம்மதி அடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X