நிதி நிறுவனத்தில் ரூ.1 கோடி மோசடி; மேற்பார்வையாளர் மீது வழக்கு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
00:23

தேனி : தேனியில் நிதிநிறுவன வாடிக்கையாளர்களின் சந்தா தொகையை வங்கியில் செலுத்தாமல் ரூ.1 கோடியே ஒரு லட்சத்து 70 ஆயிரம் மோசடி செய்த மேற்பார்வையாளர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.



தேனியில் 'ரேடியன்ட் கேஷ் மேனேஜ்மென்ட் சர்வீஸ் பிரைவேட் லிமிடெட்' என்ற நிதி நிறுவனம் உள்ளது. இதன் மேலாளர் ராமநாதபுரம் மாவட்டம் கமுதி ராமசாமிபட்டியை சேர்ந்த மோகன்ராஜ் 62.தேனியில் கிளை மேற்பார்வையாளராக தேனி ஆதிபட்டி அருண்பாபு 37 நியமிக்கப்பட்டுள்ளார். இவர், வாடிக்கையாளர்களுக்கு பணத்தை கடனாக வழங்கி, அவர்களிடம் இருந்து தவணை முறைகளில் பெற்று, சென்னை தலைமை அலுவலக வங்கி கணக்கில் செலுத்த வேண்டும்.இவர் தனக்கு கீழ் பணிபுரியும் திலகராஜ் என்பவரிடம்வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்த ரூ.1 லட்சத்து 49 ஆயிரத்து 750ஐ பெற்றுள்ளார். ஆக., 6ல் மகேஸ்வரன் என்ற ஊழியர் வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்த ரூ.3 லட்சத்து 8 ஆயிரத்து 597ஐ அருண்பாபு பெற்றுள்ளார். பின் அருண்பாபு ஆக., 5 முதல் ஆக., 8 வரை தேனி, பெரியகுளம், ஆண்டிபட்டி பகுதிகளில் நேரடியாக வாடிக்கையாளர்களிடம் வசூல் செய்து மொத்தம் ரூ.1 கோடியே ஒரு லட்சத்து 70 ஆயிரத்து 863ஐ , தேனியில் நிறுவன கணக்கு உள்ள தனியார் வங்கியில் செலுத்தாமல் அலைபேசியை 'ஆப்'செய்து தலைமறைவாகிவிட்டார். இதுகுறித்து மேலாளர் , பாஸ்கரன் பாஸ்கரன் எஸ்.பி.,யிடம் புகார் அளித்தார். எஸ்.பி., உத்தரவில் மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராமலட்சுமி, அருண்பாபு மீது மோசடி வழக்குப்பதிவு செய்துள்ளார் அவரைப்பிடிக்க எஸ்.ஐ., உதயகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X