| பழநியில் மாணவி தற்கொலை முயற்சி Dinamalar
பழநியில் மாணவி தற்கொலை முயற்சி
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
00:31

பழநி : பழநி அருகே அய்யம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 50 மாணவர்கள் படிக்கின்றனர். எட்டாம் வகுப்பு மாணவி ஒருவரை, மற்றொருவருடன் தொடர்புபடுத்தி கழிப்பறை சுவரில் சிலர் தவறாக எழுதியுள்ளனர். மாணவியை மிரட்டும் வகையில் மொட்டைக் கடிதம் ஒன்றும் கிடந்துள்ளது. பள்ளி தலைமையாசிரியர் இளங்கோவிடம் மாணவி புகார் அளித்தார். அவர் விசாரிக்காமல் கடிதத்தை கிழித்து வீசினார். மனமுடைந்த மாணவி சாணி பவுடர் வாங்கி பள்ளியில் வைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவர் பழநி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பழநி அனைத்துமகளிர் போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X