பருவம் தவறி வழங்கிய சிறுதானிய விதைகள்; பொதுக்கணக்கு குழு ஆய்வில் அதிகாரிகள் திணறல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
00:31

தேனி : தேனியில் சட்டசபை பொதுக்கணக்கு குழுவினர் ஆய்வில் பருவம் தவறி சிறுதானிய விதைகளை வழங்கி நிதி இழப்பு ஏற்படுத்தியது குறித்து அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.




தேனி மாவட்டத்தில் சட்டசபை பொதுக்கணக்கு குழு தலைவர் துரைமுருகன் தலைமையில் குழு உறுப்பினர்கள் உதயசூரியன், கீதா, நடராஜ், பழனிவேல் தியாகராஜன், பாஸ்கரன், முகமது அபுபக்கர், மோகன், ராஜா, குழு செயலாளர் சீனிவாசன், இணைசெயலாளர்கள் பத்மகுமார், தேன்மொழி, ரேவதி ஆகியோர் வந்தனர். கலெக்டர் பல்லவி பல்தேவ், டி.ஆர்.ஓ., கந்தசாமி வரவேற்றனர். இவர்கள் காலையில் வைகை அணையை பார்வையிட்டனர். பின் அரண்மனைப்புதுாரில் உள்ள அங்கன்வாடி மையம், பசுமை வீடுகள், ஆதிதிராவிடர்கள் வசிக்கும் பகுதிகளில் ரோடு வசதி, பாலம் பணிகளை ஆய்வு செய்தனர். பருவம் தவறிய காலத்தில் சிறுதானிய விதைகள் வழங்கி அரசு நிதி விரையம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது, அப்போது மழை பெய்ய வில்லை எனவும், வினியோகம் தாமதம் என முரண்பாடாக கருத்து தெரிவித்தனர். இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபோல் பிற துறைகள் குறித்து ஆய்வு நடந்தது. அதன்பின் அதிகாரிகள் ஆய்வு கூட்டம் நடந்தது.அரசிடம் அறிக்கைநிருபர்களிடம் குழு தலைவர் துரைமுருகன் கூறியதாவது:அரசு திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்கிறது. இந்த நிதியில் முறையாக பணிகள் நடந்துள்ளதா என்பதை ஆய்வு செய்துள்ளோம். வைகை அணையில் இருந்து 58 கிராம கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறந்து விடும் இடத்தை ஆய்வு செய்தோம். இது முன்னாள் முதல்வர் கருணாநிதி துவங்கிய திட்டம். இப்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. அதில் தண்ணீர் எடுத்ததாக தெரிவித்தனர். தண்ணீர் வருகின்ற காலத்தில் அந்த இடத்தை பார்த்தால்தான் உண்மை நிலைமை புரியும். மேகமலையில் வசிக்கின்ற மக்களை வெளியேற்றும் போது ஏற்படும் பாதிப்பு, அவர்களுக்கான மாற்று ஏற்பாடு பற்றி நீண்டநேரம் விவாதித்தோம். மாற்று ஏற்பாடு செய்து கொடுத்து வெளியேற்றவேண்டும் என்றோம். காலம் கடந்து சிறுதானியம் வழங்கியதில் அரசு நிதி விரையமாகி உள்ளது என்பதை விவாதித்தோம். எங்களின் ஆய்வு அறிக்கை அரசிடம் சமர்ப்பிப்போம். இப்போது அதன் முடிவு கூற முடியாது. இம் மாவட்டத்தின் வளர்ச்சி திட்டம் பற்றி கூற நான் அமைச்சர் இல்லை. இம் மாவட்டத்தில் பெரிய அமைச்சர் துணை முதல்வர் இருக்கிறார். அவரிடம்தான் கேட்க வேண்டும் , என்றார்.தேனி எம்.பி.,யும், துணை முதல்வர் பன்னீர்செல்வம் மகனுமான ரவீந்திரநாத்குமார் , சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் துரைமுருகன், உறுப்பினர்களுக்கு சால்வை அணிவித்தார். கூட்டத்தில் எம்.பி., எம்.எல்.ஏ., க்கள் ஜக்கையன், மகாராஜன், சரவணக்குமார் கலந்து கொண்டனர்.

 

Advertisement
மேலும் தேனி மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X