ரிசர்வ் சைட்டை கிரையம் செய்தது செல்லாது! பணம் திருப்பித்தர கோர்ட் உத்தரவு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

23 ஆக
2019
02:11
பதிவு செய்த நாள்
ஆக 23,2019 00:40

கோவை,:கோவை, பீளமேடு புதுாரில், பொது ஒதுக்கீடு இடத்தையும், ரோட்டையும் மனையாக விற்றது செல்லாது; கிரையம் செய்தவர்களுக்கு பணத்தை திருப்பிக் கொடுக்க, கூட்டுறவு வீடு கட்டும் சங்கத்துக்கு, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.கோவை, பீளமேடு தொழிற்கூட பணியாளர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சொசைட்டி சார்பில், 1968ல் பீளமேடு புதுாரில், 7.96 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டது.


அதில், 104 மனைகள் பிரிக்கப்பட்டு, அரசு மானியம் பெற்று, 96 வீடுகள் கட்டப்பட்டன. மீதமுள்ள இடங்களில் கட்டடம் கட்ட நிதியின்றி, மனையாக விற்கப்பட்டன. இப்பகுதிக்கு ஆர்.கே., மில் 'பி' காலனி என பெயரிடப்பட்டது.மனைகள் விற்பனைலே-அவுட் வரைபடத்தை பொதுமக்கள் ஆராய்ந்தபோது, 30 அடி ரோட்டில், 3 மனையிடம், உயர் மின்னழுத்த கம்பிகள் செல்லும் வழி என்பதால், கட்டடம் கட்ட தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவித்துள்ள இடத்தில், 2 மனை, பூங்காவுக்கு ஒதுக்கிய இடத்தில் ஒரு மனை என, 30 சென்ட் இடங்கள் விற்கப்பட்டிருந்தன.


நில உபயோக மாற்றம் செய்யாமலேயே விற்கப்பட்ட அந்த இடங்களை வாங்கியவர்கள், மாநகராட்சியில் வரைபட அனுமதி பெறாமலேயே வீடு கட்டியுள்ளனர்.கிடைத்தது உத்தரவுஇச்சூழலில், பொது ஒதுக்கீடு இடத்தை மனையாக மாற்றிக்கொள்ள, அரசிடம் ஒப்புதல் கேட்டது, சொசைட்டி. இது தொடர்பாக மாநகராட்சி மற்றும் உள்ளூர் திட்டக்குழுமத்தில் விளக்கம் கேட்காமலேயே, சொசைட்டி கோரிக்கையை ஏற்று, வழிபாட்டு தலத்துக்குரிய பொது ஒதுக்கீடு இடத்தை, மனையாக மாற்றிக் கொள்ளலாம் என, தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை உத்தரவிட்டது.அப்போதும் கூட, 'ரோடுகளையோ, கட்டடம் கட்டக்கூடாத பகுதிகளையோ மாற்றம் செய்யக்கூடாது' என தெரிவித்திருந்தது. இந்த உத்தரவு பிறப்பிப்பதற்கு முன்பாகவே, ரோட்டையும், கட்டடம் கட்டக்கூடாத பகுதிகளும் மனையிடமாக மாற்றி, விற்கப்பட்டு இருந்தன. பொது ஒதுக்கீடு இடம் மற்றும், 30 அடி ரோட்டை, 13 மனைகளாக பிரித்து, விற்கப்பட்டுள்ளது.வழக்குக்கு தீர்ப்புஅங்கு வசிப்பவர்களில் துரைராஜ் என்பவர், 'பொது ஒதுக்கீடு இடத்தை மனையாக மாற்றிக் கொள்ளலாம் என தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்' என, சென்னை ஐகோர்ட்டில், 2007ல் வழக்கு தொடர்ந்தார். 12 ஆண்டுகள் நடந்து வந்த இவ்வழக்கில், தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.


அதில், 'பொது ஒதுக்கீடு இடம் விற்கப்பட்டது; கிரையம் செய்தது செல்லாது. கிரையம் பெற்றவர்களுக்கு, கிரையம் செய்து கொடுத்த கூட்டுறவு வீடு கட்டும் சங்கம், பணத்தை திருப்பிச் கொடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளது.நகல் கிடைக்கலையாம்கோர்ட் உத்தரவு தொடர்பாக, பீளமேடு தொழிற்கூட பணியாளர்கள் கூட்டுறவு வீடு கட்டும் சொசைட்டி (கூடுதல் பொறுப்பு) செயலாளர் ரமேஷிடம் கேட்ட போது, ''கோர்ட் உத்தரவு நகல் இன்னும் கிடைக்கவில்லை. இருந்தால் கொடுங்கள். உயரதிகாரிகளுக்கு தெரிவித்து பதிலளிக்கிறேன்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ram -  ( Posted via: Dinamalar Android App )
23-ஆக-201921:58:41 IST Report Abuse
Ram அந்த இடத்தில் வீடு இருப்பவர்கள் தான் பாவம். 1968ல் 500க்கோ 1000க்கோ இடத்தை வாங்கியிருப்பார்கள்.
Rate this:
Share this comment
Cancel
விவசாயி - Tiruppur,இந்தியா
23-ஆக-201918:10:33 IST Report Abuse
விவசாயி பணம் திருப்பி தருவதா?....இது திமுக அகராதியில் இல்லையே........எப்படி வரும்..........
Rate this:
Share this comment
Cancel
Raj - coimbatore,இந்தியா
23-ஆக-201905:44:33 IST Report Abuse
Raj உத்தரவு நகல் வாங்க பல நாட்கள் ஆகுமே ? நம்ம நீதி மன்றங்கள் என்றைக்கு தீர்ப்பு உத்தரவுகளை டிஜிட்டல் முறையில் உடனடியாக வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் கொடுக்கப்போகிறதோ கடவுளுக்கே வெளிச்சம். கேட்டா ஸ்மார்ட் சிட்டி என்று கூறுவார்கள்..ஆனா உண்மையில் நம்ம ஊரு நீதி துறை கற்காலத்தில் உள்ளது. நானும் ஒரு சில வழக்குகளில் தீர்ப்பு வந்து 1 வருடம் வரை நடையாய் நடந்து தீர்ப்பு நகலை வாங்கியிருக்கிறேன்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X