புதுச்சேரி:புதுச்சேரி முழுவதும் இன்று மின்சாரம் தடைபடும் என்பது தவறான தகவல் என, மின்துறை விளக்கம் அளித்துள்ளது.புதுச்சேரி பகுதி முழுவதும் இன்று (23ம் தேதி) மின் வினியோகம் தடை செய்யப்பட உள்ளதாக, 'வாட்ஸ் ஆப்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நேற்று தகவல் பரவியது. இதனால், தொழிற்சாலைகள் நடத்துபவர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினர் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து, மின்துறை கண்காணிப்பு பொறியாளர் - 1 முரளியிடம் கேட்டபோது, 'புதுச்சேரி முழுவதும் இன்று 23ம் தேதியன்று மின் தடை செய்யப்படும் என்பது தவறான தகவலாகும். சமூக வலைதளங்களில் பரப்பப்படும் தகவலை மக்கள் நம்பத் தேவையில்லை. வழக்கம்போல இன்று மின் வினியோகம் இருக்கும் ' என தெரிவித்தார்.