பாதாள சாக்கடை திட்டப் பணிகளால் குடியிருப்புவாசிகள் தவிப்பு! பொன்னேரி பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரியம் அலட்சியம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
01:10

பொன்னேரி: பாதாள சாக்கடை திட்ட பணிகளுக்காக, தெரு சாலைகளில் தோண்டப்பட்ட பள்ளங்களில், தண்ணீர் தேங்குவதால், குடியிருப்புவாசிகள் பெரும் தவிப்பிற்கு ஆளாகி உள்ளனர். இதற்கு நடவடிக்கை எடுக்காமல், பேரூராட்சி, குடிநீர் வடிகால் வாரியம், அலட்சியமாக நடந்து கொள்வதாக, அவர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி பேரூராட்சியில், நீண்ட காலம் கிடப்பில் போடப்பட்டிருந்த பாதாள சாக்கடை திட்டப் பணிகள், முதற்கட்டடமாக, 54 கோடி ரூபாயில், கடந்த, மார்ச் மாதம் துவங்கப்பட்டது.மொத்தம், 14 வார்டுகளில், 41 கி.மீ., தொலைவிற்கு, பாதாள சாக்கடை அமைக்கப்படுகிறது. குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களின் கழிவுநீர் செல்வதற்காக இரும்பு மற்றும் பிளாஸ்டிக் உருளைகள் பதிக்கும் பணிகள், தொடர்ந்து நடக்கின்றன.சிரமம்இதற்காக, தெருக்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு, அவை சரிவர மூடப்படாமல் கிடக்கின்றன.இந்நிலையில், சில தினங்களாக, பொன்னேரியில் மழை பெய்து வருவதால், பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, சாலைகள், சகதியாக கிடக்கின்றன.இதனால், குடியிருப்புவாசிகள், தங்கள் இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்களை வெளியில் எடுத்து வரமுடியாமல் தவிக்கின்றனர்.பள்ளி மாணவர்கள், சகதி சாலையில் நடக்க சிரமப்படுகின்றனர். இரவில், சாலை பள்ளத்தில் சிக்கி, விழுந்து, வாகன ஓட்டிகள் காயம்அடைகின்றனர்.வலியுறுத்தல்இது குறித்து, பேரூராட்சி அலுவலகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரியத்திடம் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை இன்றி கிடக்கிறது. அவசர உதவிக்கு ஆட்டோ, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் குடியிருப்பு பகுதிகளுக்கு வந்து செல்ல முடியாத நிலை உள்ளது.பாலாஜி நகர், மூகாம்பிகை நகர், திருவாயற்பாடி, விநாயகா நகர் மற்றும் என்.ஜி.ஓ., நகர் பகுதிகளில் வாடகை வீடுகளில் வசிப்போர், வீடுகளை காலிசெய்து, வேறு பகுதிகளுக்கு செல்லும் நிலை உள்ளது.பாதாள சாக்கடை திட்டத்திற்காக தோண்டப்பட்டு, சரிவர மூடப்படாமல் கிடக்கும் சாலைகளில், தற்காலிக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, குடியிருப்புவாசிகள் வலியுறுத்துகின்றனர்.அலைக்கழிப்புமழை பெய்த நாளில் இருந்து, எங்களால், வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை உள்ளது. பேரூராட்சி அலுவலத்தில் முறையிட்டால், குடிநீர் வடிகால் வாரியத்திடம் தெரிவிக்க அறிவுறுத்துகின்றனர். அங்கு சென்றால், சரியான பதில் கிடைப்பதில்லை. இரண்டு நிர்வாகத்தால் அலைகழிக்கப்படுகிறோம். சரியான திட்டமிடல் இன்றி பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். குறைந்த அளவு மழைக்கே இந்த நிலை என்றால், கனமழை பெய்தால் எங்கள் நிலை மேலும் சிரமமாகும்.குடியிருப்புவாசிகள், பொன்னேரிபணி முடிந்தால் தான் சாலைபாதாள சாக்கடை திட்டம் நடைபெறும் தெருக்கள், தற்போது குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைத்துள்ளோம். திட்டப்பணிகள் முழுமையாக முடிந்தால் தான், சாலை சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும். தற்போதைக்கு ஜே.சி.,பி., இயந்திரத்தால், மேடு பள்ளங்களை சரிசெய்து வருகிறோம். பள்ளங்களில் கிராவல் கொட்டி தற்காலிக சீரமைப்பு செய்யப்படும்.பேரூராட்சி அதிகாரி, பொன்னேரி பேரூராட்சிதொடர் மழையால் பாதிப்புபள்ளம் தோண்டிய இடங்களை மூடிவிட்டு தான் செல்கிறோம். தொடர்ந்து மழை பெய்து வருவதால், பள்ளம் ஏற்பட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி உள்ளது. மழையால், அதை உடனடியாக சரிசெய்ய முடியவில்லை. ஓரிரு நாளில், பாதிப்பு உள்ள பகுதிகளில் தற்காலிக சீரமைப்பு பணிகளை செய்துவிடுவோம்.குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி,பாதாள சாக்கடை திட்டம், பொன்னேரி

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X