| பெண் பாலியல் பலாத்காரம் Dinamalar
பெண் பாலியல் பலாத்காரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
01:18

கோவை:கோவையில் பல்வேறு வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி கைது செய்யப்பட்டார்கோவை, புலியகுளம், ஏரிமேட்டை சேர்ந்தவர் ஜோஸ்வா, 29. இவர் மீது ஒண்டிப்புதுார், சூர்யா நகர் மணிகண்டன், 24, பிக்பாக்கெட் நாகராஜ் ஆகியோரை கொலை செய்த வழக்கு, தனது கூட்டாளி வினோத் என்பவருடன் சேர்ந்து பாப்பநாயக்கன்பாளையத்தில் ஒரு வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய வழக்கு, வழிப்பறி, திருட்டு உள்பட 20க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர் கடந்தாண்டு வெளியே வந்தார். இதற்கிடையே, 16 வயது மைனர் பெண்ணை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்த வழக்கிலும், கஞ்சா விற்ற வழக்கிலும் போலீசாரால் தேடப்பட்டு வந்தார்.இந்நிலையில் நேற்று காலை புலியகுளம் பகுதிக்கு தனிப்படை போலீசார் சென்றபோது அவர்களிடம் இருந்து ஜோஸ்வா தப்பியோடினார். அப்போது பள்ளத்தில் தவறி விழுந்ததில் அவரின் இடது காலில் முறிவு ஏற்பட்டது.போலீசார் அவரை 'போக்சோ' சட்டத்தின் கீழ் கைது செய்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.சிகிச்சைக்கு பின் ஜோஸ்வா சிறையில் அடைக்கப்படுவார் என, போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X