பள்ளி மாணவர்களை கடத்திய பொன்னேரி போதை வாலிபர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
01:18

பொன்னேரி: பள்ளி செல்வதற்காக, இரு சக்கர வாகனத்தில், 'லிப்ட்' கேட்டு சென்ற அக்கா, தம்பி இருவரையும் கடத்திய போதை வாலிபரை, போலீசார் கைது செய்து, சிறுவர்களை மீட்டனர்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த, அக்கரம்பேடு பகுதியைச் சேர்ந்தவர், வீரன், 40; கட்டட தொழிலாளி.இவரது, 12 வயது மகள், 11 வயது மகன் என இருவரும், நேற்று காலை, அனுப்பம்பட்டு பகுதியில் உள்ள பள்ளிக்கு செல்வதற்காக, அவ்வழியாக நடந்து சென்றனர்.அப்போது, அவ்வழியாக வந்த இருசக்கர வாகனத்தில், 'லிப்ட்' கேட்டனர். வாகன ஓட்டியும், அவர்களை ஏற்றி சென்றார். ஆனால், மாணவர்கள் பள்ளிக்கு செல்லவில்லை.இந்நிலையில், அக்கா, தம்பி இருவரும், வாலிபர் ஒருவருடன், மேட்டுப்பாளையம் வழியாக வாகனத்தில் சென்றதை பார்த்ததாக, ஆசிரியர்களிடம், சக மாணவர்கள் தெரிவித்தனர்.அக்கா, தம்பி கடத்தப்பட்டிருக்கலாம் என, கருதப்பட்டதால், ஆசிரியர், மாணவர்களின் பெற்றோருக்கும், போலீசாருக்கும், உடனடியாக தகவல் அளித்தார்.மீஞ்சூர் போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். மேட்டுப்பாளையம், எலவம்பேடு பகுதிகளில் உள்ள, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தனர்.பின், பொன்னேரி- - மீஞ்சூர் சாலையில் வாகன சோதனை மேற்கொண்டபோது, மதியம், 12:00 மணிக்கு எலவம்பேடு அருகே, இரு சக்கர வாகன ஓட்டியுடன் இருந்த அக்கா, தம்பியை போலீசார் மீட்டனர்.விசாரணையில், வாகனம் ஓட்டிய வாலிபர், மீஞ்சூர் அடுத்த, இந்துஜா நகரைச் சேர்ந்த சுகுமார், 25, என்பதும், கஞ்சா போதையில் இருந்ததும் தெரிய வந்தது.மீட்கப்பட்ட குழந்தைகள் மற்றும் போதை ஆசாமியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பள்ளி குழந்தைகள் கடத்தப்பட்டு, மூன்று மணி நேரத்தில் மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X