| காவலர் தேர்வு 7,145 பேர் பங்கேற்பு Dinamalar
காவலர் தேர்வு 7,145 பேர் பங்கேற்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
01:21

திருவள்ளூர்: நாளை மறுநாள் நடைபெற உள்ள காவலர் தேர்வில், 7,145 பேர் பங்கேற்க உள்ளனர்.தமிழ்நாடு சீருடை பணியாளர்கள் தேர்வு குழுமம் மூலமாக, இரண்டாம் நிலை காவலர் தேர்வு, நாளை மறுநாள் நடக்கிறது.திருவள்ளூர் மாவட்டத்த்தில், பிரதியுஷா பொறியியல் கல்லுாரி - -அரண்வாயல்; ஸ்ரீராம் கல்லுாரி - பெருமாள்பட்டு; டி.ஆர்.பி.சி., இந்து மெட்ரிக் பள்ளி - காக்களூர்; ஆர்.எம்.ஜெயின் வித்யாஷ்ரம் - திருவள்ளூர் ஆகிய நான்கு தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது.இதில், ஆண்கள் - 6,283, பெண்கள் - 862 என, மொத்தம், 7,145 பேர் தேர்வு எழுத உள்ளனர். அவர்கள், தேர்வு மையத்திற்கு, காலை, 9.00 மணிக்கு அறிக்கை அளிக்க வேண்டும்.எலக்ட்ரானிக் கருவிகள், தேர்வு மையம் மற்றும் தேர்வு எழுதும் அறைக்குள், அனுமதிக்கப்பட மாட்டாது.இத்தகவலை, திருவள்ளூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், பி.அரவிந்தன் தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X