வாங்காத கடனை கேட்டு தம்பதியருக்கு மிரட்டல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
01:22

பொன்னேரி: தனியார் வங்கியில் இருந்து, கடன் தொகையை வசூலிக்க வந்துள்ளதாக கூறி, தம்பதியரை மிரட்டிய வங்கி அலுவலர்கள் எனக்கூறியவர்கள் போலீசில் ஒப்படைக்கப்பட்டனர்.பொன்னேரி அடுத்த, சின்னகாவணம் பகுதியைச் சேர்ந்தவர், ஆனந்தன், 60; நேற்று காலை, இவரது வீட்டிற்கு வந்த இருவர், சென்னையில் உள்ள தனியார் வங்கியில் இருந்து, கடன் தொகையை வசூலிக்க வந்துள்ளதாக தெரிவித்து உள்ளனர்.முன்னாள் பேரூராட்சி கவுன்சிலரான ஆனந்தனின் மனைவி கீதா, 55, நாங்கள் சம்பந்தப்பட்ட வங்கியில், எந்த கடனும் வாங்கவில்லை. எங்களுக்கு அந்த வங்கியில் கணக்கும் இல்லை என, தெரிவித்தார். ஆனால், வங்கி அலுவலர்கள் எனக்கூறிய நபர்கள், மிரட்டும் தொனியில் பேசினர். அதை தொடர்ந்து, உறவினர் கடையில் இருந்த, ஆனந்தனிடம் சென்று கடன் தொகையை உடனடியாக செலுத்தும்படி மிரட்டினர். தொலைபேசியிலும், வங்கியில் இருந்து பேசுவதாக கூறி, பெண் ஒருவர் ஆனந்தனை அவதுாறாக பேசினார். அதை தொடர்ந்து, ஆனந்தன் மற்றும் அவரது நண்பர்கள், தனியார் வங்கியில் இருந்து வந்து உள்ளதாக கூறியவர்களை பிடித்து, பொன்னேரி போலீசில் ஒப்படைத்தனர். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி, ஆனந்தன் போலீசில் புகார் கொடுத்து உள்ளார்.இது குறித்து ஆனந்தன் கூறியதாவது:சம்பந்தப்பட்ட வங்கியில், எந்தவொரு கடனும் பெறாத நிலையில், எனது பேஸ்புக்கில் உள்ள புகைப்படம் மற்றும் மொபைல் போன் எண்ணை காட்டி, என்னை மிரட்டும் தொனியில் பேசினர்.என்னுடைய ஆவணங்களை பயன்படுத்தி, யாரேனும் கடன் பெற்றனரா என, தெரியவில்லை. போலீசார் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் திருவள்ளூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X