| சந்தன மரங்கள் வெட்டி கடத்தல் Dinamalar
சந்தன மரங்கள் வெட்டி கடத்தல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
01:22

போத்தனுார்:கோவை, குனியமுத்துாரை அடுத்த கோவைபுதுார், எக்ஸ் பிளாக்கில்,ஓய்வு பெற்ற அதிகாரி காந்தி, 70 தனது மனைவியுடன் வசிக்கிறார். வீட்டின் வளாகத்தில், 20 ஆண்டுகளான சந்தன மரம் ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் நள்ளிரவு, மரம் விழும் சத்தம் கேட்டு காந்தியின் மனைவி வெளியே வந்து பார்த்தார். நான்கு பேர் கொண்ட கும்பல் சந்தன மரத்தை வெட்டி, கடத்துவது தெரிந்தது.தகவலறிந்த குனியமுத்துார் போலீசார் அங்கு சென்று பார்த்தபோது, ஐந்தரை அடி நீள நடு மரம் வெட்டி, கடத்தப்பட்டது தெரியவந்தது.கோவையில் தொடர்ச்சியாக பல இடங்களில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்படுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X