'இந்தியா- சீனா கல்லுாரி பரிமாற்ற திட்ட ஒத்துழைப்பு'
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
02:07

புதுச்சேரி:இந்தியா-சீனா இடையிலான கல்லுாரி பரிமாற்ற திட்டத்தில் ஒத்துழைப்பு குறித்து, புதுச்சேரி பல்கலைக் கழகத்தில் கருத்தரங்கம் நடந்தது.



புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், ஆராய்ச்சி, கற்பித்தல் மற்றும் பிற கல்வி பரிமாற்றத் திட்டத்தில் இந்தியா - சீனா இடையிலான கல்லூரி ஒத்துழைப்பு பற்றிய கலந்துரையாடல் நேற்று நடந்தது.கல்லுாரி யுமிசார்க் மைய தலைவர் புருஷோத்தமன் வரவேற்றார். துணைவேந்தர் குர்மீத் சிங், வெளி நாட்டு கல்வி நிறுவனங்களுடன் தரமான ஒத்துழைப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.சீனாவின் சிச்சுவான் பல்கலைக்கழக தெற்காசிய ஆய்வுகள் நிறுவன துணை இயக்குநர் யாங் வென்வு பேசுகையில், 'புதுச்சேரி பல்கலைக் கழகம் - சிச்சுவான் பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்தும், சீனாவில் குறுகிய கால திட்டத்தில் மாணவர்களின் பங்களிப்பை அறிமுகப்படுத்துவதன் மூலம் மாணவர்களின் திறமையை வளர்த்துக்கொள்வது குறித்தும் பேசினார்.கருத்தரங்க அமர்வில், சீனாவில் மாஸ்டர் புரோகிராம்களை செய்வதற்கான அளவுகோல்கள், பரிமாற்றத் திட்டங்களில் பிற தெற்காசிய நாடுகளின் ஈடுபாடு மற்றும் பரிமாற்றத் திட்டங்கள் தொடர்பான மாணவர்கள் கேள்விகளுக்கு இணை பேராசிரியர் ஜெங் சியாங்யு, பேராசிரியர் யாங் வென்வு பதில் அளித்தனர். முனைவர் ஹுமாயூன் நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X