| பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் 'ரோபோ': புதுச்சேரியில் செயல் விளக்கம் Dinamalar
பாதாள சாக்கடையை சுத்தம் செய்யும் 'ரோபோ': புதுச்சேரியில் செயல் விளக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
02:08

புதுச்சேரி:மனிதர்களின்றி பாதாள சாக்கடைகளை, சுத்தப்படுத்தும் 'ரோபோ' கருவியின் செயல்விளக்கம், புதுச்சேரியில் பொதுப்பணித்துறை அதிகாரிகள் முன்னிலையில் நடந்தது.கழிவுநீர் பொங்கி வழியும் பாதாள சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் பணியாளர்கள், விஷவாயு தாக்கி உயிரிழக்கும் அவலம் தொடர்ந்து வருகிறது. இப்பணியில் நாடு முழுவதும் ஒரு லட்சத்து 80 ஆயிரம் பேர் ஈடுபட்டுள்ளனர்.2010ம் ஆண்டில் இருந்து 2017 வரை, 1470 பேர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை தடுக்கும் வகையில், பாதாள சாக்கடைகளை சுத்தப்படுத்தும் பணியில், கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் முதன் முறையாக ரோபோ ஈடுபடுத்தப்பட்டுள்ளது.இந்த ரோபோவின் செயல் விளக்கம், புதுச்சேரி மிஷன் வீதியில், பொதுப்பணித் துறை தலைமை பொறியாளர் மகாலிங்கம் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் நேற்று நடந்தது.'பண்டிகோட்' என பெயரிடப்பட்ட இந்த ரோபோ, ஒரு மணி நேரத்தில் 4 சாக்கடைகளை சுத்தம் செய்யும். மாநில அரசின் நிதி உதவியோடு 'ஜென் ரோபோட்டிக்ஸ்' என்ற நிறுவனம் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளது. வைபை, புளூடூத் வசதிகளுடன் கூடிய இந்த ரோபோவில், சாக்கடைகளை சுத்தப்படுத்த ஏதுவாக, கை போன்ற வடிவமைப்பும், அதனை கட்டுப்படுத்தும் கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன.ரோபோவை கட்டுப்படுத்துவதற்கான கட்டளைகள், அந்தந்த மாநில மொழிகளில் மாற்றிக் கொள்ளும் வகையிலும் இந்த ரோபோ வடிவமைக்கப் பட்டிருப்பது கூடுதல் சிறப்பு அம்சமாகும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X