காஷ்மீர் பிரச்னை; மோடி, மேக்ரோன் ஆலோசனை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

23 ஆக
2019
07:06
பதிவு செய்த நாள்
ஆக 23,2019 02:34

சான்ட்டிலி: பிரான்ஸ் வந்த பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபர் மேக்ரோனை சந்தித்து காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.






பிரான்ஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் நாடுகளுக்கான பயணத்தை பிரதமர் மோடி நேற்று துவக்கியுள்ளார். நேற்று ஐரோப்பிய நாடான பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டு அதிபர் இமானுவேல் மேக்ரோன் வரவேற்றார். பின் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினர். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு இருவரும் கூட்டாக பேட்டி அளித்தனர்.







மேக்ரோன் கூறியதாவது: இந்திய பிரதமராக 2வது முறையாக பொறுப்பேற்ற பின், பிரதமர் மோடியை முதன் முதலாக சந்திக்கிறேன். அவரது வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள். ஜி7 உச்சி மாநாடு குறித்து நாங்கள் பேசினோம். இந்தியாவும் ஜி7ல் அங்கம் வகிக்க வேண்டும் என நான் விரும்பினேன். அதற்காக ஜி7ல் சில மாற்றங்களை செய்துள்ளேன். ஏனெனில் இந்தியாவின் பங்களிப்பு அவசியம். அவர்களின் இருப்பும் முக்கியமானது.








இணைந்து செயல்படுவோம்:






பிரதமர் மோடியுடனான பேச்சுவார்த்தையின் போது டிஜிட்டல், சைபர் பாதுகாப்பு மற்றும் ஆப்ரிக்கா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினேன். புல்வாமா தாக்குதலுக்கு இரங்கல் தெரிவித்தோம். பயங்கரவாதத்திற்கு எதிராக நாங்கள் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம். பாதுகாப்புத் துறையில் எங்களது பிணைப்பு, நாங்கள் ஒருவருக்கொருவர் எவ்வளவு நம்புகிறோம் என்பதைக் காட்டுகிறது. 'மேக் இன் இந்தியா' திட்டத்தில் எங்களது பங்களிப்பு இருக்கும்.









காஷ்மீர் பிரச்னை:






பிரான்சிடமிருந்து இந்தியாவுக்கு, முதல் ரடேல் போர் விமானம் அடுத்த மாதம்(செப்.,) சென்றடையும். காஷ்மீர் பற்றியும், அங்குள்ள பிரச்னை குறித்தும் மோடி என்னிடம் விளக்கினார். இந்தியா எடுத்த முடிவு அவர்களது அரசுரிமை. காஷ்மீர் பிரச்னையை இந்தியாவும், பாகிஸ்தானும் இணைந்து பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும். மூன்றாம் நபரின் தலையீடு இதில் இருக்கக்கூடாது. காஷ்மீர் பிரச்னை தொடர்பாக இன்னும் சில தினங்களில் பாக்., பிரதமர் இம்ரான் கானிடம் பேச உள்ளேன். இவ்வாறு அவர் பேசினார்.








ரபேலால் மகிழ்ச்சி:






இதனை தொடர்ந்து பிரதமர் மோடி கூறியதாவது: இந்தியா, பிரான்ஸ் நாடுகளுக்கிடையேயான உறவு பேச்சுவார்த்தையுடன் நிற்கவில்லை; முக்கிய முடிவுகளும் எடுக்கப்பட்டது. இரு நாடுகளுக்கிடையே சுமூக உறவு தொடர்கிறது. 36 ரபேல் விமானங்களில் முதல் விமானம் இந்தியாவிடம் அடுத்த மாதம் பிரான்ஸ் ஒப்படைப்பதில் மகிழ்ச்சி. சிவில் அணுசக்தி உடன்படிக்கை ஒப்பந்தத்தில் நாங்கள் கையெழுத்திட்ட முதல்நாடு பிரான்ஸ்.







ஜி7 உச்சி மாநாட்டில் பங்குபெறுவதில் ஆர்வமாக உள்ளேன். இதற்காக மேக்ரோனுக்கும், பிரான்ஸிற்கும் எனது வாழ்த்துக்கள். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார். பேட்டிக்கு பின் இருவரும் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்ததுடன், கட்டியணைத்து மகிழ்ச்சி தெரிவித்தனர்.



 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (13)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
25-ஆக-201904:05:34 IST Report Abuse
skv srinivasankrishnaveni அடுத்து பாகிஸ்தானுக்கு பீ எம் சுடலைந்தானாமா அப்படிங்களா என்று துர்க்காம்மா லாகூரிலே இருக்கு சிவன்கோயிலுக்கு போயி வேண்டுதலை நிறைவேற்றி சாமிக்குபடைச்ச புளியோதரையை கொண்டுவந்து தருவாங்க என்று காக்காசோசியன் சொல்லுறாருங்கோ
Rate this:
Share this comment
Cancel
இந்தியன் kumar - chennai,இந்தியா
23-ஆக-201913:15:40 IST Report Abuse
இந்தியன் kumar இந்தியா காஷ்மீரில் செய்திருக்கும் நிலை பற்றி பிரான்ஸ் நாட்டிடம் சொல்லி ஆதரவு கேட்பதில் தவறு இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Allah Daniel - பகுத்தறிவு சொம்பு,யூ.எஸ்.ஏ
23-ஆக-201907:16:11 IST Report Abuse
Allah Daniel இதை, ஜப்பான் துணை முதல்வர் கொடுமையா எதிர்க்கிறார்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X