மாநகராட்சி புகார் பிரிவில் ஊழியர்கள் அலட்சியம்! மக்கள் அழைப்பை ஏற்று பேசுவதில்லை, கணினி குரல் பதிவு மட்டுமே கேட்கிறது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
02:50

சென்னை மாநகராட்சி புகார் பிரிவில், பொதுமக்கள் அழைப்பை, ஊழியர்கள் ஏற்பதில்லை என்றும், கணினி குரல் பதிவை மட்டுமே, பல நிமிடங்களுக்கு கேட்க வேண்டிய நிலை இருப்பதாகவும், புகார் எழுந்துள்ளது.


இதனால், தனியார் வசம் உள்ள இந்த புகார் பிரிவை, மாநகராட்சியே நேரடியாக ஊழியர்களை நியமித்து நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.சென்னை மாநகராட்சியின், 200 வார்டுகளிலும், அடிப்படை வசதிகள் தொடர்பாக, பொதுமக்கள், மாநகராட்சிக்கு புகார் தெரிவிக்க, '1913' என்ற புகார் பிரிவு தொலைபேசி சேவை, நடைமுறையில் உள்ளது.இந்த புகார் பிரிவு, ஒப்பந்த அடிப்படையில், தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சல்இந்த எண்ணுக்கு வரும் புகார்களை, தொடர்புடைய துறை அதிகாரிகளுக்கும், மண்டல அலுவலகங்களுக்கும், அந்தந்த துறை சார்ந்த மேல் அதிகாரிகளுக்கும், மின்னஞ்சல் வழியாக, புகார் பிரிவு ஊழியர்கள் அனுப்பி வைக்கின்றனர்.மேலும், புகார் அளிப்பவருக்கும், புகார் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை குறித்த குறுஞ்செய்தி அனுப்பப்படும். கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன் துவங்கிய, இந்த புகார் சேவை பிரிவுக்கு, துவக்கத்தில், பெரும் வரவேற்பு கிடைத்தது.


ஆனால், தற்போது புகார் பிரிவு, பெயரளவில் மட்டுமே உள்ளது; செயல்பாடு இல்லை என, பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.தற்போது, சென்னையில் மழைக்காலம் துவங்கியுள்ளது. சாலைகளில் தேங்கும் மழைநீரை, அந்தந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள், பாதாள சாக்கடை மூடிகளை திறந்து வடிய வைக்கின்றனர். அழைப்பு துண்டிப்புஇதை அறியாத பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும், விபத்தில் சிக்கும்அபாயம் ஏற்பட்டு உள்ளது.மேலும், மின் மாற்றிகளில் பல, கதவுகள் இல்லாமல் உள்ளன. ஆபத்தான அவற்றை கடக்கும் குழந்தைகள், முதியவர்கள்,விபத்துக்குள்ளாகும் விபரீதம் உள்ளது.மரக்கிளைகள் விழுவது, தெருவிளக்குகள் எரியாதது, சாலையில் உள்ள பள்ளம், கொசு பெருக்கம் உள்ளிட்ட புகார்களை தெரிவிக்க, பலரும், மாநகராட்சியின், '1913' என்ற புகார் பிரிவு தொலைபேசி எண்ணை, தொடர்பு கொள்கின்றனர்.ஒரு வாரமாக, புகார் பிரிவுக்கு, பொதுமக்கள் அழைத்தால், நீண்ட நேரமானாலும், பதிவு செய்யப்பட்ட கணினி குரல், 'காத்திருக்கவும்' என்ற பதிலை மட்டுமே சொல்கிறது.


இதனால், பொறுமையிழக்கும் பொதுமக்கள், அழைப்பை துண்டித்து கொள்கின்றனர். அப்படியும், தொலைபேசி அழைப்பை எடுத்தால், அந்த நபருக்கு, அதாவது, புகார் பிரிவில் பணியாற்றும் ஊழியர்களில் பலருக்கு, சென்னை மாநகராட்சியின் செயல்பாடுகளை பற்றிய, அடிப்படை தகவல்கள் கூட தெரியாத நிலை உள்ளது.மாநகராட்சியில், எத்தனை துறைகள் உள்ளன; அத்துறைகளின் பணிகள்என்னென்ன என்பதுகுறித்த அடிப்படை தகவல்களை கூட, தெரியாதவர்கள் தான், புகார் பெறும் பிரிவில், பணியில் உள்ளனர்.குறிப்பாக, சாலையில் ஆங்காங்கே பள்ளம் என புகார் அளித்தால், நெடுஞ்சாலை துறையிடம் புகார் தெரிவிக்கவும் எனக்கூறி, அழைப்பை துண்டித்து விடுகின்றனர். மேலும், புகாரின் மீது நடவடிக்கை தொடர்பாக, எந்த குறுஞ்செய்தியையும் அனுப்புவதில்லை. இது குறித்து, கொளத்துாரைச் சேர்ந்த வழக்கறிஞர், வி.எஸ்.சுரேஷ் கூறியதாவது:மாநகராட்சியின் புகார் பிரிவு, ஓராண்டுக்கு முன், சிறப்பாக செயல்பட்டு வந்தது. சமீப காலமாக, அந்த பிரிவின் செயல்பாடு, மந்தமாக உள்ளது. கொளத்துார் பகுதிகளில், பெரும்பாலான இடங்களின், தெரு விளக்குகள் எரியவில்லை. இதனால், அசம்பாவித சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது.தனியார் வசம்தெருவிளக்குகளை சரி செய்வது குறித்து, மாநகராட்சியின், '1913' என்ற புகார் எண்ணிற்கு, மூன்று நாட்களுக்கு மேலாக தொடர்பு கொள்ள முயன்று வருகிறேன்.எவ்வளவு நேரம் காத்திருந்தாலும், கணினி பதிவை தவிர, வேறு யாரும் அழைப்பை ஏற்கவில்லை. அதன்பின், மாநகராட்சி அலுவலகத்திற்கு நேரடியாக சென்று புகார் அளித்தேன்.அவர்கள், '24 பேர் பணியாற்ற வேண்டிய இடத்தில், 10 பேர் தான் உள்ளோம். உங்கள் புகாரை சரி செய்ய, தற்போது முடியாது' என, பதிலளித்தனர்.


மாநகராட்சி நிர்வாகத்தில் உள்ள குளறுபடிகளை, கமிஷனர் தலையிட்டு சரி செய்ய வேண்டும். இது போன்ற பிரச்னைக்கு தீர்வாக, புகார் பிரிவு ஊழியர்களுக்கு, ஆறு மாதத்திற்கு ஒரு முறை, மாநகராட்சியின் செயல்பாடுகள், துறை விபரங்கள் ஆகியவற்றை தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில், மாநகராட்சி உரிய பயிற்சி அளிக்க வேண்டும்.


இவ்வாறு, அவர் கூறினார்.தனியார் வசம் உள்ள மாநகராட்சி புகார் பிரிவை, மாநகராட்சியே, நேரடியாக ஊழியர்களை நியமித்து நடத்த வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.கமிஷனர் கண்காணிப்பாரா?சென்னை மாநகராட்சி புகார் பிரிவை, முன்னாள் மேயர் சைதை துரைசாமி, பதவி காலத்தில் வாரம் ஒரு முறை, புகார் பிரிவின் செயல்பாடுகள் குறித்து, நேரடியாக ஆய்வு செய்தார்.தினமும் வரும் புகார்கள், அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், தினசரி அறிக்கையாக, மேயருக்கு தரப்படும். இதற்காகவே, மாவட்ட வருவாய் அலுவலர் நிலையிலான அதிகாரியை, தனி உதவியாளராக பணிக்கு வைத்திருந்தார். மேலும், மேயர் செல்லும் சாலைகளில், ஏதாவது குறைகளை கண்டால், சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அழைக்காமல், புகார் பிரிவில், பொதுமக்கள் புகார் அளிப்பதை போல, புகார் பதிவு செய்வதையும், அவர் வழக்கமாக கொண்டிருந்தார்.தான் அளித்த புகாரின் நிலையை, அடுத்த நாள் அறிக்கையில் பரிசோதிப்பதும் அவர் வழக்கம்.


இதனால், புகார் பிரிவில், ஊழியர்கள் கவனமுடன் பணியாற்றினர்; அதிகாரிகளும், புகார் பிரிவில் வரும் புகார்களுக்கு, சரியான நடவடிக்கை எடுத்தனர். அவரது பதவிக்காலம் முடிந்த பின், புகார் பிரிவு, கேட்பாரற்ற நிலைக்கு வந்துவிட்டது. மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ், புகார் பிரிவின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.


- நமது நிருபர் --

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X