3 பேர் மீது குண்டாஸ்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
07:11

மதுரை: நாகமலை புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் 27. நெல்லை மகாராஜா நகர் முகமது எக்கியா 24. சிவகங்கை விஜித்குமார் என்ற மனோஜ் 24. இவர்கள் மீது மதுரையில் கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. இவர்களை குண்டர்சட்டத்தில் கைது செய்து கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டார்.




வேலை கிடைக்காததால் தற்கொலை


மதுரை: புதுமகாளிப்பட்டி ரோடு நல்லமுத்துப்பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் கீர்த்திகா 23. பி.காம்., பட்டதாரியான இவருக்கு, படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை. இதனால் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். தெற்குவாசல் போலீசார் விசாரிக்கின்றனர்.




வாகனம் மோதி பலி


மதுரை: பனையூர் கண்ணன் மகன் அசோக்குமார் 26. நேற்றுமுன்தினம் இரவு 7:20 மணிக்கு மண்டேலா நகர் பகுதியில் டூவீலரில் வந்தார். ெஹல்மெட் அணியவில்லை. அப்போது வாகனம் ஒன்று மோதியதில் தலையில் அடிப்பட்டு இறந்தார்.ஆட்டோவில் கஞ்சாமதுரை: பெருங்குடி தங்கபாண்டி 37. இவர் அண்ணாநகரில் ஆட்டோவில் ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டார். ஆட்டோ மற்றும் ரூ.24 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.




நர்ஸ் வீட்டில் திருட்டு


மதுரை: திருமோகூர் பெருங்குடியைச் சேர்ந்தவர் பிருத்விராஜ் 60. இவரது மனைவி வெள்ளலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்ஸாக உள்ளார். நேற்றுமுன்தினம் காலை மனைவி வேலைக்கு சென்றுவிட, பிருத்விராஜ் கோரிப்பாளையம் சென்றுவிட்டு வீடு திரும்பினார். அப்போது கதவு உடைக்கப்பட்டு எட்டரை பவுன் நகைகள், ரூ.20 ஆயிரம் திருடப்பட்டிருந்தது. ஒத்தக்கடை போலீசார் விசாரிக்கின்றனர்.




மணல் கடத்தியவர் கைது


திருமங்கலம்: கரிசல்களாம்பட்டி பாண்டி மகன் சோணை 24. இவர் அதே பகுதியில் உள்ள கண்மாயில் நேற்று முன்தினம் இரவு டிராக்டரில் அனுமதியின்றி மணல் அள்ளியதாக கைது செய்யப்பட்டார். டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.



மதுபாட்டில்கள் பறிமுதல்


திருமங்கலம்: சிந்துபட்டி பகுதியில் போலீஸ் சோதனையில் அனுமதியின்றி மதுபாட்டில்களை விற்ற சிந்துபட்டி ஜெயலட்சுமி, ஆறுமுகம் உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். 135 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. வாடிப்பட்டி: சமயநல்லுார் தெத்துார் பிச்சை, கீழமட்டையான், வீரய்யா உட்பட 5 பேரிடம் 53 மதுபாட்டில்களை சமயநல்லுார் போலீசார் பறிமுதல் செய்தனர். விக்கிரமங்கலம் கவுல்பட்டி பிச்சையை 55, கைது செய்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.




கஞ்சா விற்றவர்கள் கைது


பேரையூர்: குறுக்கம்பட்டியில் சேடபட்டி போலீசார் ரோந்து சென்றனர். அங்கு கஞ்சா விற்ற பரமனை 40,கைது செய்து 100 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர். அல்லிகுண்டத்தில் கஞ்சா விற்ற பாலுவையும் 45, கைது செய்தனர்




அரிவாள் வெட்டு: 2 பேர் கைது


பேரையூர்: வி.அம்மாபட்டி தவிடன். 12ம் வகுப்பு படிக்கும் இவரது மகளை அதே ஊரை சார்ந்த முத்துகாளை கிண்டல் செய்தது குறித்து தவிடன் கண்டித்தார். ஆத்திரமுற்று அவரை அரிவாளால் வெட்டியதாக கருப்பையா, தர்மர் கைது செய்யப்பட்டனர். முத்துகாளையை தேடி வருகின்றனர்.




கொலையில் பெண் கைது


பேரையூர்: கீழகாடனேரி குமார் 35. இங்குள்ள குவாரியில் லாரி டிரைவராக இருந்தார். குவாரி முறைகேடுகளை அதிகாரிகளுக்கு தெரிவித்தார். ஆத்திரமுற்ற குவாரி உரிமையாளர்கள், ஊழியர்கள் 8 பேர் ஜூலை 2ல் குமாரை கொலை செய்துவிட்டு, விபத்தில் அடிபட்டு இறந்ததாக நாடகமாடினர். இதுதொடர்பாக கார்த்திக், சுரேஷ், சந்தோஷ், மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நேற்று குவாரி கண்காணிப்பாளர் பேச்சியம்மாளை 45, டி.கல்லுப்பட்டி போலீசார் கைது செய்தனர்.




சில்மிஷ தந்தை கைது


சமயநல்லுார்: ஊர்மெச்சிகுளம் டீக்கடைகாரர் பாஸ்கரன் 48. தன் 7 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக சமயநல்லுார் மகளிர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X