| கிடப்பில் பாலப்பணிகள்: அவதியில் பொதுமக்கள் Dinamalar
கிடப்பில் பாலப்பணிகள்: அவதியில் பொதுமக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
07:13

சோழவந்தான் : சோழவந்தானில் வாடிப்பட்டி ரோட்டில் ரூ.41 கோடியில் துவங்கப்பட்ட ரயில்வே மேம்பால பணிகள் இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகின்றனர்.பால சர்வீஸ் ரோட்டில்சிறுமழை பெய்தவுடன்பள்ளங்களில் தண்ணீர்தேங்கி விடுகிறது. இதில் வாகனங்கள் சிக்கி நெரிசல் ஏற்படுகிறது.சேறும் சகதியுமான இந்த ரோட்டை டூவீலரில்கடந்து செல்வோர் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.2016ம் ஆண்டு துவங்கிய பாலப்பணிகள்ஒப்பந்தப்படி 18 மாதங்களில் முடிக்கப்பட வேண்டும். நில ஆர்ஜித ஆவண பணிகளில் அதிகாரிகளின் அலட்சியத்தால் தாமதமாகிறது. மேம்பால பணிகளை துவக்குவதுடன் சர்வீஸ் ரோட்டையும் சீரமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்
பொழுது போக்கு


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X