| கருப்பாயூரணி - ஓடைப்பட்டி சாலைப்பணி மந்தம்! தூசியால் வாகன ஓட்டிகள் சிரமம் Dinamalar
கருப்பாயூரணி - ஓடைப்பட்டி சாலைப்பணி மந்தம்! தூசியால் வாகன ஓட்டிகள் சிரமம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
07:17

கருப்பாயூரணி: மதுரையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் கருப்பாயூரணி - ஓடைப்பட்டி ரோடு விரிவாக்கப்பணி ஆமை வேகத்தில் நடக்கிறது. ரோட்டிலிருந்து கிளம்பும் துாசியால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.



மதுரை - சிவகங்கை இடையே ரூ.பல லட்சத்தில் ரோடு விரிவுபடுத்தப்படுகிறது. இதற்காக ரோட்டோர மரங்கள், கருப்பாயூரணி ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஜல்லி கற்கள் பரப்பப்பட்டுள்ளன. ஓடைப்பட்டி ஆற்றுப்பால கட்டுமானப்பணி முடிந்துள்ளது. பாலத்திற்கான இணைப்பு சாலை அமைக்க ஜல்லிக்கற்களை பரப்பியுள்ளனர்.



இவ்வழியாக வாகனங்கள் செல்லும்போது துாசி பறக்காமல் இருக்க ஜல்லி கற்கள் மீது அவ்வப்போது தண்ணீர் தெளிக்க வேண்டும். தண்ணீர் ஊற்றாமல் விடுவதால் கடும் துாசி எழுகிறது. இவ்வழியாக பள்ளி நேரங்களில் அதிக வாகனங்கள் செல்கின்றன. பாதை தெரியாதபடி துாசி ரோட்டை மறைப்பதால் விபத்து அபாயம் நிலவுகிறது. பாலப்பணியை விரைந்து முறையாக நெடுஞ்சாலைத்துறையினர் மேற்கொள்ள வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X