| மரங்கள் வெட்ட தடை விதிக்க வேண்டும் Dinamalar
மரங்கள் வெட்ட தடை விதிக்க வேண்டும்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
07:21

மதுரை : மதுரை காளவாசல் பைபாஸ் ரோட்டில் பாலம் அமையாத பகுதிகளிலும் மரங்கள் வெட்டுவதற்கு தடை விதிக்க வேண்டும் என குடியிருப்போர் வலியுறுத்தினர்.

இதுகுறித்து கலெக்டர் ராஜசேகரிடம் முன்னாள் எம்.எல்.ஏ., நன்மாறன் தலைமையில் குடியிருப்போர் பிரதிநிதிகள் மதிமாறன், சீனிவாசன், வீரமணி மனு அளித்தனர்.

பின் அவர்கள் கூறியதாவது: காளவாசல் பாலப்பணிக்காக சொக்கலிங்கநகர் வரை ரோட்டின் இரு புறமும் மரங்களை வெட்டியுள்ளனர். பாலம் அமையாத பிற பகுதிகளிலும் வளர்ந்துள்ள மரங்களையும் வெட்டுகின்றனர். இதனால் பறவைகளின் வாழ்விடங்கள் அழிக்கப்படுவதுடன், பசுமைசூழல் பாதிக்கப்படுகிறது. பாலம் அமையாத பிற பகுதிகளில் மரங்களை வெட்ட தடை விதிக்க வேண்டும் என்றனர்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X