| கேமராவில் ஆர்.டி.ஓ., ஆபீஸ் கண்காணிப்பு Dinamalar
கேமராவில் ஆர்.டி.ஓ., ஆபீஸ் கண்காணிப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
08:29

மேட்டூர்: தமிழகம் முழுவதும், 146 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் மூலம், ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பு, வாகன சான்று வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த அலுவலகங்களில், முறைகேடு நடப்பதை தவிர்க்க, 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதில், சொந்த கட்டடத்தில் இயங்கும் அலுவலகங்கள், வாகன பழகுனர் பயிற்சி நடக்கும் இடங்களில், கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. வாடகை கட்டடத்தில் இயங்கினால், அலுவலகங்களில் மட்டும் பொருத்தப்பட்டுள்ளது. மேட்டூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், 12 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம், மாநிலம் முழுவதும் உள்ள அலுவலகங்களில் நடக்கும் பணியை, சென்னை போக்குவரத்து ஆணையாளர் அலுவலகத்திலிருந்து கண்காணிக்க முடியும் என, அலுவலர்கள் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X