| தொழிலாளியை வெட்டி மொபைல் பறிப்பு: நள்ளிரவில் மர்ம கும்பல் அட்டூழியம் Dinamalar
தொழிலாளியை வெட்டி மொபைல் பறிப்பு: நள்ளிரவில் மர்ம கும்பல் அட்டூழியம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
08:32

சேலம்: நள்ளிரவில், தொழிலாளியை கத்தியால் வெட்டி, மொபைல் போனை பறித்து, அட்டூழியத்தில் ஈடுபட்ட மர்ம கும்பல் குறித்த வீடியோ காட்சிகள், சமூகவலைதளங்களில் வைரலாகி வருவது, மக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது. சேலம், அம்மாபேட்டை, கொய்யாத்தோப்பு, பாலமுருகன் தெருவைச் சேர்ந்த, முனியப்பன் மகன் கோவிந்தராஜ், 34; அதே பகுதியிலுள்ள, 'எக்ஸலன்ட்' நூல் மில்லில் பணிபுரிகிறார். கடந்த, 19 இரவு, 10:10 மணிக்கு, பணி முடிந்து, சைக்கிளில் வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டு வாசலில், பைக்கில் வந்து நின்ற இரு மர்ம நபர்கள், 'அருகில், விசைத்தறி கூடம் எங்குள்ளது' என, கோவிந்தராஜிடம் கேட்டனர். தொடர்ந்து, 'நேரம் என்ன' என, கேட்க, கோவிந்தராஜ், தன் பையிலிருந்த 'நோக்கியா' மொபைல் போனை எடுத்தார். அப்போது, பைக்கிலிருந்து இறங்கிய நபர், திடீரென கத்தியை காட்டி மிரட்டி, பணம் கேட்டுள்ளார். பணம் இல்லை என, தெரிவித்ததால், கத்தியால், கோவிந்தராஜின் கை மணிக்கட்டு பகுதியில், மர்ம நபர் வெட்டினார். தொடர்ந்து, மொபைல் போனை பறித்துக்கொண்டு, பைக்கில், அதிவேகமாக சென்று தப்பிவிட்டனர். கோவிந்தராஜை, உறவினர்கள் மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து, நேற்று முன்தினம் அளித்த புகார்படி, அம்மாபேட்டை போலீசார் விசாரிக்கின்றனர். அப்பகுதியிலுள்ள, 'சிசிடிவி' கேமரா பதிவுகளை வைத்து, வழிப்பறியில் ஈடுபட்டவர்களை அடையாளம் காணும் முயற்சியில், போலீசார் ஈடுபட்டுள்ளனர். அதேநேரம், கும்பல் மிரட்டி, கத்தியால் வெட்டிய காட்சி கள், வாட்ஸ்ஆப், பேஸ்புக்கில் வைரலாகி வருவதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X