ஓணத்துக்கு தயாரான ரூ.100 கோடி வேட்டி, சேலை தேக்கம்: கேரளாவில் தொடர் மழையால் உற்பத்தியாளர்கள் கலக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
10:18

ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சேலம், ஈரோடு மாவட்டங்களிலிருந்து, விற்பனைக்கு அனுப்பவிருந்த, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள வேட்டி, சேலைகள், கேரளாவில் பெய்யும் தொடர் மழையால் தேக்கமடைந்துள்ளது. இது உற்பத்தியாளர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டம், தாரமங்கலம், ஓமலூர், இளம்பிள்ளை, வேம்படிதாளம், பெருமாகவுண்டம்பட்டி, அம்மாபேட்டை, பொன்னம்மாபேட்டை பகுதிகளில் தயாராகும், பட்டு வேட்டி, சேலைகள், நூல் வேட்டி, சேலைகள் கேரளாவுக்கு, விற்பனைக்கு அனுப்பப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஓணம் பண்டிகையை முன்னிட்டு, சேலம், ஈரோடு மாவட்டங்களிலிருந்து, ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு அனுப்பப்படும். இதற்காக, திருவனந்தபுரம், கொச்சின், பாலக்காடு, எர்ணாகுளம், ஆலப்புழா உள்ளிட்ட பகுதிகளிலுள்ள வியாபாரிகள், ஆகஸ்ட் தொடக்கத்தில், அதிகளவில் 'ஆர்டர்' கொடுப்பர். நடப்பாண்டு, செப்., 11ல் கொண்டாட உள்ள நிலையில், சேலம், ஈரோடு வியாபாரிகளுக்கு, எதிர்பார்த்த ஆர்டர் இல்லை.


இதுகுறித்து, சேலம் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: கேரளாவில், நடப்பாண்டும் மழை பெய்து வருவதால், போதிய ஆர்டர் கிடைக்கவில்லை. 2016 ஓணம் பண்டிகையில், 5,000 கோடி ரூபாயாக இருந்த, தமிழக ஜவுளி விற்பனை, 2017ல், 2,000 கோடி, 2018ல், கனமழையால் பண்டிகை ரத்தான நிலையில், 200 கோடி ரூபாய்க்கு மட்டும் விற்பனை நடந்தது. நடப்பாண்டில் இதுவரை, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள ஜவுளி ரகங்கள் விற்பனைக்கு சென்ற நிலையில், வியாபாரிகளின் ஆர்டர் குறைந்துவிட்டது. இதனால், ஓணம் பண்டிகையை எதிர்நோக்கி, சேலம், ஈரோட்டில் தயாரித்த, 100 கோடி ரூபாய் மதிப்புள்ள, ஜவுளிகள் தேக்கமடைந்து, உற்பத்தியாளர்கள் கலக்கமடைந்துள்ளனர். பண்டிகைக்கு முன், மழை நின்று, கேரளா வியாபாரிகளின் ஆர்டர் வந்தால், ஜவுளி விற்பனை சூடுபிடிக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.


- நமது சிறப்பு நிருபர் -


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X