போக்குவரத்து ஓய்வு தொழிலாளர்களின் நிலுவை தொகை: கருணாநிதி பாணியில் வழங்க முதல்வர் முடிவால் அதிர்ச்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
10:19

சேலம்: கருணாநிதி - ஜெயலலிதா பாணியில், முதல்வர் பழனிசாமி, போக்குவரத்துக்கழக ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் நிலுவைத்தொகை, 1,093 கோடி ரூபாயை, விழா நடத்தி வழங்க முடிவு செய்துள்ளது, தொழிலாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தமிழக அரசு போக்குவரத்துக்கழகங்கள், ஆண்டுதோறும் இழப்பை சந்திப்பதால், நிதி நெருக்கடியை சமாளிக்க, ஓய்வு தொழிலாளர்களின் பணப்பலன்களை, நிர்வாக செலவுக்கு பயன்படுத்துகின்றன. இதனால், தொழிற்சங்கங்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி, அரசிடமிருந்து நிலுவை தொகையை பெற்றுவருகின்றன. கடந்த, 2009ல், நிலுவைத்தொகை, 750 கோடி ரூபாயை, அரசு வழங்கிய நிலையில், அதற்காக, சென்னையில், விழா நடத்தி, அப்போதைய முதல்வர் கருணாநிதி, ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கு வழங்கினார். அவர் பாணியில், ஜெயலலிதா, 2014ல், 1,000 கோடி ரூபாயை வழங்கினார். தற்போது, 2018 ஏப்ரல் முதல், 2019 மார்ச் வரையான நிலுவைத்தொகை, 1,093 கோடி ரூபாயை வழங்க, தமிழக அரசு முன்வந்துள்ளது. ஆனால், கருணாநிதி, ஜெயலலிதா பாணியில், முதல்வர் பழனிசாமியும், விழா நடத்தி வழங்கவுள்ளார். சென்னை அல்லது கரூரில், விழா நடத்தி, முதல்வர் கையால், தொழிலாளர்களுக்கு வழங்க, போக்குவரத்து அமைச்சர் விஜயபாஸ்கர் முடிவு செய்துள்ளார். இதற்காக, நேற்று, சென்னை, பல்லவன் இல்லத்தில், போக்குவரத்து கமிஷனர் ராதாகிருஷ்ணன், அனைத்து கோட்ட மேலாண் இயக்குனர்களிடம் ஆலோசித்தார். இதனால், விழா தேதி, விரைவில் அறிவிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுகுறித்து, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பணியாளர் சம்மேளன, மாநில பொதுச்செயலாளர் பத்மநாபன் கூறுகையில், ''போக்குவரத்துக்கழகங்கள் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், விழா நடத்துவது, அதற்காக, பல்வேறு மாவட்டங்களிலிருந்து, ஓய்வு பெற்ற தொழிலாளர்களை அழைத்து வருவது, செலவை அதிகரிக்கும். தற்போது, நடைமுறையில் உள்ளதுபோல், அவரவர் வங்கி கணக்கில், தொகையை செலுத்த வேண்டும்,'' என்றார்.


எந்த கோட்டத்துக்கு எவ்வளவு தொகை?


கோட்டம் தொகை (ரூபாயில்)


சென்னை - 125.55 கோடி


எஸ்.இ.டி.சி., - 63.38 கோடி


விழுப்புரம் - 130.26 கோடி


சேலம் - 123.63 கோடி


கோவை - 164.79 கோடி


கும்பகோணம் - 219.80 கோடி


மதுரை - 165.66 கோடி


நெல்லை - 99.93 கோடி


மொத்தம் - 1,093 கோடி


 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X