| முதியவர் அடித்து கொலை: விவசாயிக்கு ஆயுள் சிறை Dinamalar
முதியவர் அடித்து கொலை: விவசாயிக்கு ஆயுள் சிறை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
10:19

சேலம்: முதியவரை அடித்துக்கொன்ற விவசாயிக்கு, ஆயுள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி, நாடார்காடு பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி, 65; இவரது, பக்கத்து காட்டைச் சேர்ந்த, விவசாயி ராஜகோபால், 46. இவரது மனைவியுடன், பெரியசாமியை தொடர்புபடுத்தி பேசிவந்ததால், இருவர் இடையே, தகராறு இருந்துவந்தது. இந்நிலையில், 2014, ஜன., 1ல், ராஜகோபால், வீட்டுக்கு வந்தபோது, அங்கு பெரியசாமி இருந்தார். இதனால், அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டது. அதில், ஆத்திரமடைந்த ராஜகோபால், கட்டையால், பெரியசாமியை தாக்கினார். அதில், பெரியசாமி உயிரிழந்தார். கெங்கவல்லி போலீசார் வழக்குப்பதிந்து, ராஜகோபாலை கைது செய்தனர். இந்த வழக்கு, சேலம் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று, ராஜகோபாலுக்கு, ஆயுள் தண்டனை, 1,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி குமரகுரு உத்தரவிட்டார்.

 

Advertisement
மேலும் சேலம் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X