அதிகாரிகள் மெத்தனத்தால் நவீன கழிப்பறைகள் வீண்!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

24 ஆக
2019
10:15
பதிவு செய்த நாள்
ஆக 23,2019 22:20

சென்னையில் பெரும் வரவேற்பு பெற்ற, நவீன கழிப்பறைகள், மாநகராட்சியின் உரிய பராமரிப்பு இல்லாததால், ஆங்காங்கே, நடைபாதைகளை ஆக்கிரமித்து, காட்சி பொருளாக மாறியுள்ளது.சென்னை மாநகராட்சியில், பொதுமக்களின் பயன்பாட்டிற்காக, 853 இடங்களில், 6,701 அறைகளுடன் கழிப்பறைகள் கட்டப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகின்றன.


பராமரிப்பு பணிக்காக, ஆண்டுதோறும், 30 கோடி ரூபாய்க்கு மேல், நிதி ஒதுக்கப்படுகிறது.'கமிஷன்'ஆனால், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த அரசியல் கட்சியினர், ரவுடிகளின் ஆக்கிரமிப்பில் மாநகராட்சி கழிப்பறைகள் உள்ளன. இவர்கள், மக்களிடம், ஐந்து முதல், 10 ரூபாய் வரை, கட்டணம் வசூலிக்கின்றனர்.மக்களிடம் வசூலிக்கும் கட்டணத்தில், ஒரு குறிப்பிட்ட தொகை, மாநகராட்சி அதிகாரிகளுக்கு கமிஷனாக செல்வதால், தடுக்க வேண்டிய அதிகாரிகளும், இதை கண்டுகொள்வதில்லை.


இந்நிலையில், 2012ல், 'நம்ம டாய்லெட்' என்ற நவீன கழிப்பறை திட்டத்தை, மாநகராட்சி கொண்டு வந்தது.வரவேற்புஅதன்படி, சென்னை முழுவதும், 5,000 நவீன கழிப்பறைகள் அமைக்க மாநகராட்சி முடிவு செய்தது. முதற்கட்டமாக நடைபாதைகள் மற்றும் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில், 35 கோடி ரூபாய் செலவில், 348 இடங்களில், நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டன.இந்த கழிப்பறைகள் பெரும்பாலும், ஆண்களுக்காக அமைக்கப்பட்டாலும், குறிப்பிட்ட சில இடங்களில், பெண்களுக்காக அமைக்கப்பட்டன.


இவை, பெண்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.இந்த நவீன கழிப்பறைகளில், ஒன்று அல்லது இரண்டு அறைகள் மட்டுமே வைக்கப்பட்டதால், மாநகராட்சி கழிப்பறைகளில், அடாவடி கட்டண வசூலில் ஈடுபட்டோரால், இவற்றை ஆக்கிரமிக்க முடியவில்லை.சீர்கேடுநவீன கழிப்பறைகளில் இருந்து, மாநகராட்சி அதிகாரிகளுக்கு, 'கமிஷன்' வரத்து இல்லாததால், அவற்றை பராமரிக்காமலேயே கிடப்பில் போட்டனர். மேலும், புது கழிப்பறைகள் அமைப்பதையும் கைவிட்டனர். இதனால், மக்களின் வரிப்பணம் வீணாகி வருகிறது.


பராமரிப்பு இல்லாத நிலையில், பல இடங்களில், மக்கள் இயற்கை உபாதைகளை, நடைபாதைகளிலும், சாலை ஓரங்களிலும், ரயில் தண்டவாளங்களிலும் நீர்நிலை பகுதிகளிலும் கழித்து வருகின்றனர்.இதனால், சுகாதார சீர்கேடும், நடைபாதைகள் உபயோகப்படுத்த முடியாத வகையிலும் காணப்படுகிறது.இரண்டு ஆண்டுகளுக்கு முன் தான், சென்னை மாநகராட்சி, திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத பகுதியாக அறிவித்து கொண்டது.


இது வெறும் கண்துடைப்பே, இன்றளவும், பல்வேறு பகுதிகளில், மக்கள் தங்களின் அன்றாட இயற்கை உபாதைகளை, திறந்தவெளி இடங்களில் தான் கழித்து வருகின்றனர்.21,000 கழிப்பறைகள் வேண்டும்சென்னையில், 10 சதவீதத்துக்கு மேற்பட்டோர், திறந்தவெளிகளில் தான், இன்றளவும் மலம் கழிக்கின்றனர். 30 சதவீதம் பேர் சிறுநீரை, திறந்தவெளிகளில் கழிக்கின்றனர். இதற்கு, மக்கள் தொகைக்கு ஏற்ப, பொது கழிப்பறைகள் இல்லாதது தான் முக்கிய காரணம்.


தற்போதைய மக்கள் தொகைக்கு ஏற்ப, 21 ஆயிரம் கழிப்பறைகள் வேண்டும். ஆனால், மிக குறைந்த கழிப்பறைகளே உள்ளன. ஆக்கிரமிப்பில் உள்ள கழிப்பறைகளை மீட்டு, மக்கள் இலவசமாக பயன்படுத்த, மாநகராட்சி அனுமதிக்க வேண்டும்.மேலும், குடிசை மாற்று வாரிய பகுதிகள், சாலையோரம் வசிக்கும் மக்கள் மற்றும் ரயில் தண்டவாள ஓரங்களில் வசிக்கும் மக்களுக்காக, அப்பகுதிகளில் கூடுதலாக கழிப்பறைகளை மாநகராட்சி அமைக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.-- நமது நிருபர் --

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
24-ஆக-201905:52:15 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் ச்வாச் பாரத் ன்னு சொல்லி கக்கூஸில் கூட காசடித்த களவாணிகள் காவிக்கட்சியும் அதன் அடிமைகளும் தான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X