| குன்றத்துார் - போரூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் Dinamalar
குன்றத்துார் - போரூர் சாலையில் போக்குவரத்து நெரிசல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
22:21

குன்றத்துார்:கோவூரில், நிறுத்தத்திற்குள் செல்லாமல், சாலையிலேயே நிறுத்தப்படும் பேருந்துகளால், தினமும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


குன்றத்துாரிலிருந்து கோவூர், பெரிய பணிச்சேரி, கெருகம்பாக்கம், மவுலிவாக்கம் வழியாக, போரூரை இணைக்கும் சாலை செல்கிறது.அதிக போக்குவரத்து கொண்ட இச்சாலை வழியாக, பல்வேறு இடங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குன்றத்துாரில் செல்லும் பேருந்துகள், கோவூரில் சாலையிலேயே நிறுத்தப்படுகின்றன.அதேநேரத்தில், அங்கிருந்து ஏராளமான பயணியர் சென்னைக்கு செல்வதால், தனியாக பேருந்து இயக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.


இதையடுத்து, மூன்று ஆண்டுகளுக்கு முன், கோவூரில் பேருந்து நிறுத்தம் கட்டப்பட்டது. ஆனால், அதன்பின், தனியாக பேருந்து இயக்கவில்லை. குன்றத்துாரில் இருந்து செல்லும் பேருந்துகள், வழக்கம்போல் சாலையிலேயே நிற்கின்றன.இதனால், பேருந்து நிறுத்தம் ஆட்டோ, லோடு வேன் நிறுத்தமாக மாறிவிட்டது. மக்கள் வரிப்பணம் வீணானது தான் மிச்சம். பயணியரும் ஆபத்தான வகையில், சாலையிலேயே நின்று ஏறுகின்றனர்.எனவே, போக்குவரத்து கழக அதிகாரிகள் தலையிட்டு, நிறுத்தத்திற்குள் பேருந்துகள் நின்று செல்ல, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X