| 29ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் Dinamalar
29ல் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
22:29

சென்னை:சென்னையில், 29ம் தேதி, தனியார் துறை, வேலைவாய்ப்பு முகாம் நடக்க உள்ளது.சென்னை, கிண்டி, திரு.வி.க., தொழிற்பேட்டையில், டான்சி கார்ப்பரேட் வளாகத்தில், மாநில தொழில் நெறி வழிகாட்டும் மையம் சார்பில், முகாம் நடக்க உள்ளது. காலை, 10:00 மணி முதல், பகல், 2:00 மணி வரை, முகாம் நடக்கும்.படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு, தனியார் துறையில், வேலைவாய்ப்பு ஏற்படுத்திட, இம்முகாம் நடத்தப்படுகிறது.


வேலைவாய்ப்பு முகாமில், 25க்கும் மேற்பட்ட, தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன.பட்டயப் படிப்பு, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, செவிலியர், ஹோட்டல் மேனேஜ்மென்ட், பொறியியல் பட்டப்படிப்பு படித்துள்ள, 21 வயது முதல், 40 வயது வரை உள்ள, வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள், முகாமில் பங்கேற்று பயன் பெறலாம்.


வேலை தேடுவோர், தங்கள் கல்வி சான்றிதழ்கள் மற்றும் சுய விபர குறிப்புகளுடன், முகாமில் பங்கேற்க வேண்டும்; முன்பதிவு அவசியமில்லை. மேலும் விபரங்களுக்கு, 'மாநில தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகலாம் அல்லது 044 - 2250 0134 என்ற எண் வழியே, தொடர்பு கொள்ளலாம்' என, வேலைவாய்ப்பு துறை ஆணையர், ஜோதி நிர்மலாசாமி தெரிவித்துள்ளார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X