| ஒரு மாதம் மயானம் மூடல் Dinamalar
ஒரு மாதம் மயானம் மூடல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
22:42

சென்னை:வேலங்காடு மயான பூமியில், பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், ஒரு மாதம் மூடப்படுவதாக, மாநகராட்சி தெரிவித்துள்ளது.சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:அண்ணா நகர் மண்டலம், வேலங்காடு ஹிந்து மயான பூமியில், இறந்தவர் உடலை எரிக்கும் இயந்திரத்தில் பராமரிக்கும் பணி, செப்., 23ம் தேதி வரை மேற்கொள்ளப்பட உள்ளது.எனவே, பராமரிப்பு பணி நடைபெறும் நாட்களில், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள, அரும்பாக்கம் ஹிந்து மயான பூமி, வில்லிவாக்கம் ஹிந்து மயான பூமி ஆகியவற்றை, பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X