அமராவதி சர்க்கரை ஆலையில் 1.25 லட்சம் டன் கரும்பு அரவை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
23:22

மடத்துக்குளம் : மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில், இதுவரை ஒரு லட்சத்து 25 ஆயிரம் டன் கரும்பு அரவை நடந்துள்ளது.




மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை அரவைக்கு, கணியூர், கொமரலிங்கம், நெய்க்காரபட்டி, பழநி மற்றும் ஆலைப்பகுதி ஆகிய ஐந்து கோட்டப்பகுதி விவசாயிகளிடம் கரும்பு கொள்முதல் செய்யப்படுகிறது. ஏப்ரல் தொடங்கி செப்டம்பர் வரை ஆறு மாதம் ஆலை அரவை பருவமாகும். தினமும், 1,250 டன் அரவை செய்யும் திறன் கொண்ட இயந்திரங்கள் ஆலையில் உள்ளன.கடந்த ஆண்டுகளில் போதிய மழை இல்லாததால் கடும் வறட்சி ஏற்பட்டு, 2016 -17, 2017 -18 ம் ஆண்டில் கரும்பு அரவை நடக்கவில்லை.




2018 ம் ஆண்டு, புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பகுதியில் 3,750 ஏக்கர் கரும்பு சாகுபடி நடந்தது.இந்த சாகுபடியை அடிப்படையாகக்கொண்டு, இந்த ஆண்டு கரும்பு அரவை செய்ய சில மாதங்களுக்கு முன்பிருந்து, ஏற்பாடுகள் நடந்தன. அரவைக்கு, 1,35,000 டன் கரும்பு பதிவானது.இதனை தொடர்ந்து ஆலை அரவைக்கு தயாரானது. கடந்த மார்ச் 25ம் தேதி இளம்சூடு ஏற்றும் விழா நடந்தது; 30ம் தேதி காலையில், 2019ம் ஆண்டுக்கான அரவை தொடங்கியது.நான்கு மாதம் கடந்த நிலையில் இதுவரை, 1,25,000 டன் கரும்பு அரவை செய்யப்பட்டுள்ளன. இந்த மாத இறுதியில் நடப்பு ஆண்டுக்கான கரும்பு அரவை நிறைவு செய்யப்படும்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X