மாவட்ட மருத்துவக் கல்லூரி வேப்பூரில் அமைய எதிர்பார்ப்பு! 20 ஏக்கர் கோவில் நிலத்தை அளிக்க மக்கள் உறுதி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
23:31

வேப்பூர்: கடலுார் மாவட்டத்தில் மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனை அமைக்க இடம் தேர்வு செய்யும் பணி துவங்கிய நிலையில், வேப்பூரில் அமைக்க 20 ஏக்கர் நிலம் வழங்குவதாக கிராம மக்கள் முன்மொழிந்து உறுதி அளித்தனர்.


கடலுார் அடுத்த அரிசிபெரியாங்குப்பம் ஊராட்சி, எம்.புதுாரில் (கேப்பர் மலை) 116 ஏக்கர் பரப்பளவில் அரசு காசநோய் மருத்துவமனை உள்ளது. இங்கு, 2011ல் தி.மு.க., ஆட்சியின் போது, அப்போதைய சுகாதாரத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையில், துணை முதல்வராக இருந்த ஸ்டாலின், ரூ. 100 கோடியில், அரசு மருத்துவக் கல்லுாரிக்கு அடிக்கல் நாட்டினார். ஆனால், ஒன்பது ஆண்டுகளாகியும் பணி துவங்கவில்லை.


இந்நிலையில், கடந்த மாதம் 11ம் தேதி தாலுகா தோறும், மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அமைக்க, 20 ஏக்கர் நிலம் தேர்வு செய்து தர கலெக்டர் உத்தரவிட்டார். இதனை, சப் - கலெக்டர்கள் அந்தந்த தாசில்தாருக்கு அனுப்பி வைத்தனர்.முன்மொழிவுஇந்நிலையில், வேப்பூரில் மருத்துவக் கல்லுாரி அமைக்க வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் நீண்ட நாள் விருப்பம். இடம் தேர்வு நடப்பதாக அறிந்த பொதுமக்கள் விருத்தாசலம் மார்க்க சாலையில், வேப்பூர் அய்யனார் கோவில் பட்டாவில் உள்ள 20 ஏக்கர் நிலத்தை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அமைக்க தருவதாக தாசில்தாரிடம் முன்மொழிந்து உறுதி அளித்தனர்.


இதனால், கோவில் நிலம் அறநிலையத்துறைக்கு சொந்தமானது இல்லை என, தடையில்லா சான்று பெற்று, கலெக்டரிடம் கோப்புகளை வழங்கும் பணி நடக்கிறது. இதனை, கலெக்டர் ஏற்று கொண்டால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என வருவாய் துறையினர் தெரிவித்தனர்.திக்.. திக்..பயணம்சென்னை - திருச்சி சாலையில் 20 கி.மீ., துாரத்திலும், கடலுார் - சேலம் சாலையில் 40 கி..மீ., துாரத்திலும் வேப்பூர் தாலுகா உள்ளது. முறையான திட்டமின்றி சாலை அமைத்ததால் தினசரி விபத்து நடக்கிறது. விபத்தை தடுக்க நெடுஞ்சாலைத் துறையினர் மறு சீரமைப்பு, பாலங்கள் அமைக்கும் பணி செய்கின்றனர். காவல் துறையினர் வாகன ஓட்டிகளை எச்சரிக்கை செய்ய எல்.இ.டி., விளக்குகளை அமைத்தது.இருப்பினும் விபத்துக்கள் நடந்து கொண்டு தான் உள்ளது. விபத்தில் காயமடைவோர் சிகிச்சை பெற 30 கி.மீ., துார விருத்தாசலம், 60 கி.மீ., துார பெரம்பலுார், 30 கி.மீ., துார உளுந்துார்பேட்டை, 60 கி.மீ., துாரமுள்ள விழுப்புரம், முண்டியம்பாக்கம் மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு செல்கின்றனர்.


இதில், உரிய நேரத்தில் சிகிச்சை கிடைக்காமலும், மருத்துவமனை செல்லும் வழியிலும், பலர் இறக்கின்றனர். ஆண்டு தோறும் சராசரியாக 120 பேர் இறக்கின்றனர்.15 ஆண்டு கோரிக்கைஇதனால், வேப்பூரில் நவீன வசதியுடன் கூடிய மருத்துவமனை அமைக்க வேண்டும் என்பது 15 ஆண்டு கால கோரிக்கையாக உள்ளது. மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அமைக்க இடம் தேர்வுக்கான வாய்ப்பை பயன்படுத்தி, கோவிலின் 20 ஏக்கர் நிலத்தை வழங்க கிராம மக்கள் முன் வந்துள்ளனர்.சிறந்த இடம்சென்னை - திருச்சி, கடலுார் - சேலம் சாலைகள் இணையும் இடத்தில் உள்ளதால், ஆம்புலன்ஸ் வந்து செல்லவும், காயமடைவோர் சிகிச்சை பெறவும் மருத்துவமனைக்கு விரைவில் செல்ல முடியும். மேலும், 24 மணி நேரமும் வெளி மாநிலம், மாவட்டங்களிலிருந்து அரசு மற்றும் தனியார் பஸ் வசதி, இருப்பதால் கல்லுாரி அமைய சிறந்த இடமாக உள்ளது.கடைகோடி வளர்ச்சிவேப்பூர் கடைகோடியில் உள்ளதால், அடிப்படை வசதியின்றி, பொருளாதார வளர்ச்சியில் பின் தங்கியுள்ளது.


இங்கு, மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அமைந்தால், சுகாதாரம் மற்றும் மருத்துவத்திற்கான பகுதியாக மாறும். கடைகோடி மக்களின் பொருளாதாரம் வளர்ச்சி பெறும்.இதனால், வேப்பூரில் மாவட்ட மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை அமைய மக்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X