| டிரைவர் தற்கொலை Dinamalar
டிரைவர் தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
23:35

நெல்லிக்குப்பம்: குடும்ப தகராறில் டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரத்தை சேர்ந்தவர் அருள்,43; டிரைவர். இவரது மனைவி மஞ்சுளா, 37. அருள் சரியாக வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வீட்டில் தகராறு செய்து கொண்டிருந்துள்ளார்.கடந்த 3ம் தேதி வேலைக்கு செல்வதாக கூறி, மனைவி மஞ்சுளாவிடம் பணம் வாங்கி கொண்டு சென்றார். வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு வந்ததால் தகராறு ஏற்ப்பட்டுள்ளது. இதனால் மனம் உடைந்த அருள் மண்ணெண்ணெய் ஊற்றி தீவைத்துக் கொண்டார். ஆபத்தான நிலையில் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருள், நேற்று இறந்தார்.நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X