| தொழிலாளி தற்கொலை Dinamalar
தொழிலாளி தற்கொலை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
23:36

நெல்லிக்குப்பம்: கூலித்தொழிலாளி துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.நெல்லிக்குப்பம் அடுத்த கொங்கராயனூரை சேர்ந்தவர் தங்கராசு, 55; கூலித் தொழிலாளி. இவர் ரகுமான் என்பவரிடம் பணம் வாங்கி கொண்டு, கடந்த 7 ஆண்டுகளாக கரும்பு வெட்டி வந்துள்ளார். கடந்த இரண்டு மாதமாக தங்கராசு கரும்பு வெட்டும் வேலைக்கு செல்லவில்லை. வேலைக்கு வராததால் பணத்தை தருமாறு ரகுமான் தங்கராசுவிடம் கேட்டுள்ளார். பணத்தை திருப்பி கொடுக்க வழியில்லாததால் மனம் உடைந்த தங்கராசு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நெல்லிக்குப்பம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X