| பயன்பாடு இல்லாத பயணிகள் நிழற்குடை Dinamalar
பயன்பாடு இல்லாத பயணிகள் நிழற்குடை
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
23:36

நடுவீரப்பட்டு: சி.என்.பாளையத்தில் பஸ் போக்குவரத்து இல்லாத இடத்தில், நிழற்குடை கட்டி அதிகாரிகள் சாதனை செய்துள்ளனர்.சி.என்.பாளையம்-சிலம்பிநாதன்பேட்டை ரோட்டில் புத்திரன்குப்பம் கிராமத்தில் கடந்த 2012-13ம் ஆண்டு எம்.பி., நிதியில் பயணிகள் நிழற்குடை கட்டப்பட்டது. இந்த ரோடு இதுவரை பஸ் போக்குவரத்தே இல்லாத ரோடு. இந்த ரோட்டில் தேவையில்லாமல் பயணிகள் நிழற்குடை கட்டி அரசு அதிகாரிகள் சாதனை செய்துள்ளனர். அரசின் நிதி பாழாகி உள்ளது.இந்த நிழற்குடை தற்போது மாடு தொழுவமாகவும், விறகு போட்டு வைக்கும் இடமாக மாறி உள்ளது. இந்த நிழற்குடை கட்ட உத்தரவு வழங்கிய அதிகாரிகள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X