| வழிப்பறி கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது Dinamalar
வழிப்பறி கொள்ளையன் குண்டர் சட்டத்தில் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
23:38

கடலுார்: வழிப்பறி செய்த வாலிபரை, குண்டர் தடுப்பு சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். பண்ருட்டியை சேர்ந்தவர் தட்சணாமூர்த்தி மகன் பரணிதரன், 20; இவர், பண்ருட்டி-சென்னை சாலையில் ரயில்வே கேட் அருகில் கடந்த ஜூலை 20ம் தேதி, காய்கறி வாங்க சென்றார். அப்போது, விழுப்புரம், சாலாமேட்டை சேர்ந்த வெண்ணிமலை மகன் மணிகண்டன், 21; என்பவர் பரணிதரனை வழிமறித்து, கத்தியை காட்டி மிரட்டி 25,000 ரூபாயை வழிப்பறி செய்தார். பண்ருட்டி போலீசார் வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர். இவரின் குற்றச் செயலை கட்டுப்படுத்தும் பொருட்டு குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் அன்புச்செல்வனுக்கு, எஸ்.பி., ஸ்ரீஅபிநவ் பரிந்துரை செய்தார். இதை அடுத்து அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார். கடலுார் மத்திய சிறையில் உள்ள மணிகண்டனை, குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்வதற்கான உத்தரவு நகலை போலீசார் நேற்று வழங்கினர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X