| குறுமைய அளவிலான கேரம் போட்டி Dinamalar
குறுமைய அளவிலான கேரம் போட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
23:41

ஊட்டி : ஊட்டி அண்ணா உள் விளையாட்டு அரங்கில், ஊட்டி சரகம் குறு மையம் அளவிலான கேரம் போட்டிகள் நடந்து வருகிறது.



ஊட்டி வட்டத்திற்கு உட்பட்ட அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் என, ஏராளமான பள்ளிகள் பங்கேற்று வயத்துக்கு தகுந்தாற்போல், பல்வேறு பிரிவுகளில் விளையாடி வருகின்றனர்.14 வயது மாணவர்கள் ஒற்றையர் போட்டியில்; பவீஷ் முதலிடம், ஸ்ரீ சிவலிங்கம் 2வது இடம்; இரட்டையர் போட்டியில், ஹரீஸ்பிரிட்டோ, பிரதீப்குமார் முதலிடம்; சபரீஷ், தீக்சக்த், 2வது இடம்.17 வயதுக்குட்பட்ட மாணவர்கள் ஒற்றையர் போட்டியில், ஹரி பிரகாஷ் முதலிடம், அஜய் 2வது இடம்; இரட்டையர் போட்டியில் முகமது ஹனஸ், திலகேஷ் முதலிடம்; ஜெஸ்னு, ஹலந்த், 2வது இடம். 19 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் ஒற்றையர் போட்டியில்; குணசேகரன் முதலிடம், அன்பரசன், 2வது இடம்; இரட்டையர் போட்டியில் ரிஷாந்த், ஸ்ரீஹரி முதலிடம்; சுராஜ், சந்தோஷ், 2வது இடம் பிடித்து வெற்றி பெற்றனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X