| புதுஅட்டுபாயில் மனு நீதி நாள் முகாம் Dinamalar
புதுஅட்டுபாயில் மனு நீதி நாள் முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
23:43

மஞ்சூர் : குந்தா தாலுகா சார்பில், புதுஅட்டுபாயில் கிராமத்தில் மனு நீதி நாள் முகாம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் நிர்மலா தலைமை வகித்தார்.




வட்ட வழங்கல் அலுவலர் கணேஷ் முன்னிலை வகித்தார்.இதில், அரசு துறை அதிகாரிகள் துறை சார்பில் நலத்திட்டம் குறித்து விளக்கமாக எடுத்து கூறினார். தொடர்ந்து, பயனாளிகளுக்கு ஓய்வூதியம், புதிய குடும்ப அட்டை உட்பட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.மேலும், கன மழையால் புதுஅட்டுபாயில் கிராமத்தில் வீடுகள் இழந்தவர்களுக்கு வீடு, தடுப்பு சுவர், சாலை, நடைப்பாதை சீரமைத்து தருமாறு பொதுமக்கள் மனு அளித்தனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X