| முடங்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் Dinamalar
முடங்கும் திடக்கழிவு மேலாண்மை திட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
23:50

உடுமலை : உடுமலை சுற்றுப்பகுதி ஊராட்சிகளில், குப்பைக்கழிவுகளை உரமாக்குவதற்கு பயன்படுத்தாமல், எரிப்பதனால், திடக்கழிவு மேலாண்மைத்திட்டம் முடங்கியுள்ளது.



உடுமலை ஒன்றியத்தில், 38 ஊராட்சிகள் உள்ளன. ஊராட்சி மற்றும் நகராட்சிகளில், கழிவுகளை மறுசுழற்சி செய்து உரமாக்குவதற்கு, திடக் கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும், குப்பையை சேகரிக்க, குறிப்பிட்ட எண்ணிக்கையில் வீடுகளுக்கு துாய்மைக் காவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். சேகரிக்கும் குப்பைக்கழிவுகளை, மக்கும் மற்றும் மக்காததாக, தரம் பிரிக்க வேண்டும்.




மக்கும் குப்பைகளை உரமாகவும், மக்காத குப்பைகளை மறுசுழற்சி செய்து தார்ரோடு போடுவதற்கு பயன்படுத்தும் திட்டத்தின் செயல்பாடுகளாக உள்ளன. திருப்பூர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டம், பெரும்பாலான ஊராட்சிகளில் செயல்படவில்லை. குப்பைக்கழிவுகளை தரம் பிரிப்பதற்கும், உரமாக்குவதற்கும் லட்சம் ரூபாய் செலவில் ஊராட்சிகளில் உரக்குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது கட்டமைப்புகள் பெயரளவில் காட்சிப்பொருளாக மட்டுமே இருக்கிறது.ஒரு ஒன்றியத்தில், மொத்தமாகவே, அதிகபட்சமாக, மூன்று ஊராட்சி களில் மட்டுமே இத்திட்டத்தில் குப்பைக்கழிவுகளை உரமாக்கி வருகின்றனர்.




மீதமுள்ள கிராமங்களில், குப்பைகளை சேகரித்து, தீ வைக்கின்றனர். பல கிராமங்களில், பொது மக்கள் விழிப்புணர்வு இல்லாமல், திறந்த வெளியில் குப்பைக்கழிவுகளை கொட்டுகின்றனர்.குப்பைகழிவுகளை கொட்டுவதற்கு அமைக்கப்படும் குழிகளைத் தவிர, அனைத்து பகுதிகளிலும் ஆங்காங்கு கழிவுகளை கொட்டி சுகாதாரத்தையும் சீர்குலைக்கின்றனர்.



ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகம் மட்டுமின்றி, மாவட்ட நிர்வாகமும் இப்பிரச்னைகளை கண்டு கொள்ளாமல் மவுன மாகவே இருப்பதால், திருப்பூர் மாவட்டத்தின் முழு சுகாதார இலக்கு நிறைவேறுவதற்கான சாத்தியமில்லாத நிலை நிலவுகிறது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X