| குடிமராமத்து பணி துவக்கம் Dinamalar
குடிமராமத்து பணி துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
23:53

தியாகதுருகம்: தியாகதுருகம் ஒன்றியத்தில் 2.16 கோடி ரூபாய் மதிப்பில் குடிமராமத்து பணிகள் துவக்க விழா நடந்தது.தியாகதுருகம் ஒன்றியத்தில் உள்ள 40 ஊராட்சிகளில் 90 குளங்கள், 24 ஏரிகள் குடிமராமத்து திட்டத்தின் கீழ் சீரமைக்க தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 2.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.இப்பணிகளை கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ., பிரபு நேற்று துவக்கி வைத்தார். பி.டி.ஓ.,க்கள் இந்திராணி, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்கள் அய்யப்பா, ஷியாம் சுந்தர் முன்னிலை வகித்தனர்.ஒன்றிய பொறியாளர்கள் கோமதி, ஜெயந்தி அசோக்காந்த், அ.தி.மு.க., நிர்வாகிகள் ஜான்பாஷா, கிருஷ்ணமூர்த்தி, சாமிதுரை, ராஜேந்திரன், தமிழரசி குமரவேல், கஜேந்திரன், பாலகிருஷ்ணன், குமரவேல், மணிவண்ணன், குமார், குமாரசாமி, பரியாஸ், சிவா, மூர்த்தி, நம்பி உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X