குறுமைய அளவிலான கேரம் போட்டி அரசுப்பள்ளி மாணவர்கள் அசத்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
23:58

உடுமலை : உடுமலை, குறுமைய அளவிலான கேரம் போட்டியில், குமரலிங்கம் அரசுப்பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.



உடுமலையில், குறுமைய அளவிலான குழு விளையாட்டுப் போட்டிகள், பள்ளி மாணவர்களுக்கு நடக்கிறது. உடுமலை கல்வி மாவட்ட அளவில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளின் மாணவர்கள் இதில் பங்கேற்கின்றனர். முதலிடத்தில் வெற்றி பெறும் மாணவர்கள், மாவட்ட அளவிலான போட்டிக்கும், தொடர்ந்து மண்டல அளவிலான போட்டிகளுக்கும் தகுதி பெறுகின்றனர்.




அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், மாணவர்களுக்கான கேரம் போட்டி ஒற்றையர் மற்றும் இரட்டையர் ஆட்டங்களாக நடந்தன. ஆண்கள் பள்ளி உடற்கல்வி இயக்குனர் காசிராஜன், உடற்கல்வி ஆசிரியர்கள் அழகேசன் மற்றும் மற்ற பள்ளி ஆசிரியர்கள் போட்டிகளை ஒருங்கிணைத்தனர். மாணவர்களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில், 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில், புங்கமுத்துார் காந்தி கலா நிலையப்பள்ளி அணி முதலிடத்தில் வெற்றி பெற்றது.




இந்த இரண்டு பிரிவிலும், சீனிவாசா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், எஸ்.கே.பி., மேல்நிலைப்பள்ளியும் இரண்டாமிடங்களில் வெற்றி பெற்றன. 19 வயதுக்கு உட்பட்டவர் களுக்கான ஒற்றையர் ஆட்டத்தில், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளி முதலிடத்திலும், புங்கமுத்துார் காந்தி கலா நிலையப்பள்ளி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன.இரட்டையர் ஆட்டத்தில், 14 மற்றும் 17 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான பிரிவில், புங்கமுத்துார் காந்தி கலா நிலையப்பள்ளி முதலிடத்திலும், எஸ்.கே.பி.,பள்ளி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன. 19 வயதினருக்கான பிரிவில், எஸ்.கே.பி., முதலிடத்திலும், குமரலிங்கம் பள்ளி இரண்டாமிடத்திலும் வெற்றி பெற்றன.




வரும் 26ல் போட்டிதொடர்ந்து, மாணவியருக்கான, கால்பந்து, வாலிபால், கூடைப்பந்து, பால் பேட்மிட்டன் போட்டிகள் ஆர்.வி.ஜி., மெட்ரிக் பள்ளியில், வரும் 26ம் தேதி நடக்கிறது.

 

Advertisement
மேலும் திருப்பூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X