கிண்டி:தாம்பரத்தில் இருந்து சைதாப்பேட்டை நோக்கி, 'ரெடி மிக்ஸ்' லாரி ஒன்று, நேற்று காலை சென்றது. தஞ்சாவூரைச் சேர்ந்த விஜயகுமார், 33, என்பவர், லாரியை ஓட்டி சென்றார்.கட்டுப்பாட்டை இழந்த லாரி, கிண்டி, ஹால்டா சந்திப்பு அருகே கவிழ்ந்தது.கிண்டி போக்குவரத்து பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து, லாரியை அப்புறப்படுத்தினர். இதனால், அச்சாலையில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. இந்த விபத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.