| சாலையை சீரமைக்க கோரி போராட்டம் Dinamalar
சாலையை சீரமைக்க கோரி போராட்டம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

23 ஆக
2019
23:59

போரூர்:போரூர் - குன்றத்துார் சாலையை சீரமைக்க கோரி, வியாபாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோயம்பேடில் இருந்து, மூன்றாம் கட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள தொழிற்சாலைகளுக்கு எடுத்துச் செல்லும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இதற்காக, போரூர் -- குன்றத்துார் சாலையில் பள்ளங்கள் தோண்டப்பட்டன. பணிகள் முடிவடைந்தும், சாலை சீரமைக்கப்படவில்லை. இதனால் சேதமடைந்து, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து, போரூர் வியாபாரிகள் சங்கத்தினர், போரூர், சிக்னல் அருகே, நேற்று காலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுட்டனர். போரூர் போலீசார் சமரசம் பேசியதையடுத்து, கலைந்து சென்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X