| வங்கி அதிகாரி போல போனில் பேசி வடபழனி டிரைவரிடம், 'லபக்' Dinamalar
வங்கி அதிகாரி போல போனில் பேசி வடபழனி டிரைவரிடம், 'லபக்'
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
00:00

வடபழனி:வங்கி மேலாளர் போல பேசி, கார் ஓட்டுனரிடம், 75 ஆயிரம் ரூபாய் சுருட்டிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.வடமாநில கும்பல்கள், வங்கி மேலாளர்கள் போல, மொபைல் போனில் தொடர்பு கொண்டு, பொதுமக்களிடம், ஏ.டி.எம்., டெபிட் மற்றும்கிரெடிட் கார்டு எண்கள் மற்றும் ரகசிய குறியீடுஎண்களை பெற்று, பணத்தை சுருட்டி வருகிறது. அந்த கும்பலைச் சேர்ந்த ஒருவர், 19ம் தேதி, வடபழனி, முத்துகோட்டம்பகுதியைச் சேர்ந்த, கார் ஓட்டுனர், மணியை தொடர்பு கொண்டுள்ளார்.மணியும், தான் சேமிப்பு கணக்கு துவங்கி உள்ள வங்கியில் இருந்து, வேறு தகவல்கள் பெற, சில தினங்களாக முயற்சித்துள்ளார். திடீரென மர்ம நபர், வங்கி மேலாளர் பேசுவதாக கூறியதால், மணி நம்பிவிட்டார்.இவரிடம், மர்ம நபர், 'உங்கள் கிரெடிட் கார்டு தேதி காலாவதியாக போகிறது. அதை புதுப்பிக்க வேண்டும்' என, கூறி, கிரெடிட் கார்டு எண்கள் மற்றும் ரகசியகுறியீடு எண்களை பெற்று, மணியின் வங்கி கணக்கில் இருந்து, 75 ஆயிரம் ரூபாயை திருடி உள்ளார்.இது குறித்து விசாரிக்கும் வடபழனி போலீசார், சைபர் கிரைம் போலீசாரின் உதவியையும் நாடி உள்ளனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X