| நிலத்தடி நீரில் எண்ணெய் படலம் Dinamalar
நிலத்தடி நீரில் எண்ணெய் படலம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
00:02

திருவொற்றியூர்:நிலத்தடி நீரில் எண்ணெய் படலம் மிதப்பதால், மக்கள் பீதியடைந்துள்ளனர்.திருவொற்றியூர், திருச்சினாங்குப்பம் - குடிசை மாற்று வாரிய குடியிருப்புகளில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.இங்கு, சில தினங்களாக, நிலத்தடிநீரின் மீது, எண்ணெய் படலம் மிதக்கிறது. நீரை பயன்படுத்தும்போது, சருமம் நிறம் மாறுதல், அரிப்பு போன்றவை ஏற்படுவதாக, அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.குடியிருப்பின் அருகே, சமையல் எண்ணெய் தொழிற்சாலை உள்ளது. நிலத்தடியில் செல்லும் அந்நிறுவன குழாயில் பழுது ஏற்பட்டு, நிலத்தடி நீர் பாழாகி இருக்கலாம் என, அவர்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர். இதனால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X