| குறுமைய செஸ், கபடி போட்டிகள் Dinamalar
குறுமைய செஸ், கபடி போட்டிகள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
00:03

சூலுார் : சூலுார் குறுமைய கபடி, சதுரங்க போட்டிகளில், கள்ளப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடம் பெற்று அசத்தினர்.




சூலுார் குறுமைய கபடி போட்டி, சுல்தான்பேட்டையில் நடந்தது. 19 மற்றும் 17 வயது என, இரு பிரிவுகளில் மாணவிகளுக்கான போட்டிகள் நடந்தன. இதில், கள்ளப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவியர் அணி, இரு போட்டிகளில் முதலிடம் பெற்று அசத்தினர்.19 வயது பிரிவு இறுதி போட்டியில், வாகராயம்பாளையம் அரசு பள்ளி அணியை, கள்ளப்பாளையம் அரசு பள்ளி அணி, 32 -11 என்ற புள்ளி கணக்கில் வென்றது.17 வயது பிரிவு இறுதி போட்டியில், வாகராயம்பாளையம் அரசு பள்ளி அணியை, கள்ளப்பாளையம் அரசு பள்ளி அணி, 28 - 14 என்ற புள்ளி கணக்கில் வென்றது.




இதே போல், சூலுார் குறுமைய சதுரங்க போட்டியில், 17 வயது மாணவர் பிரிவில், கள்ளப்பாளையம் அரசு பள்ளி மாணவர் சுரேஷ்குமார் முதல் பரிசை வென்றார்.முதலிடம் பெற்ற மாணவ, மாணவிகளை, பள்ளி தலைமையாசிரியை மணி மாலா, உடற்கல்வி ஆசிரியர் நாகராஜ் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் வாழ்த்தினர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X