| வெவ்வேறு இடங்களில் நடந்த பலி Dinamalar
வெவ்வேறு இடங்களில் நடந்த பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
00:03

லாரி - பைக் விபத்துபோரூர்:- முகப்பேரைச் சேர்ந்தவர், நிர்மல், 18. காட்டாங்கொளத்துாரில் உள்ள, தனியார் கல்லுாரியில் பொறியியல், முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவரது நண்பர், அய்யப்பன்தாங்கலைச் சேர்ந்த கேலட்பென்னி, 18. இதே கல்லுாரியில், 'விஷுவல் கம்யூனிகேஷன்' படித்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, இருவரும், இரு சக்கர வாகனத்தில் வீடு திரும்பினர். இவர்கள், தாம்பரம் - மதுரவாயல் நெடுஞ்சாலையில், போரூர் ஏரி அருகே சென்ற போது, முன்னால் சென்ற, டேங்கர் லாரி மீது, இரு சக்கர வாகனம் மோதியது. இதில், நிர்மல், சம்பவ இடத்திலேயே பலியானார். கேலட்பென்னி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். பூந்தமல்லி போலீசார் விசாரித்து, டேங்கர் லாரி ஓட்டுனர், குப்பா பிள்ளை, 54, என்பவரை கைது செய்தனர்.


சிறுவனுக்கு நேர்ந்த சோகம்


யானைகவுனி: திருநின்றவூர், கருமாரியம்மன் நகரைச் சேர்ந்தவர், விக்கி, 17. இவர், நேற்று முன்தினம் நள்ளிரவு, இருசக்கர வாகனத்தில், பெரியமேடு, சட்டண்ணன் சாலை வழியாக அசுர வேகத்தில் சென்றார். வேக தடுப்பில் ஏறிய போது, நிலை தடுமாறி துாக்கி வீசப்பட்ட இவர், படுகாயமடைந்து, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து யானைக்கவுனி போலீசார் விசாரிக்கின்றனர்.நடந்து சென்றவர் மீது பைக் மோதல்கோடம்பாக்கம்: கோடம்பாக்கம், புளியூர்புரம், பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர், ரவி, 49. இவர், நேற்று முன்தினம் இரவு, கோடம்பாக்கம் ஆற்காடு சாலை, பஜனை கோவில் சந்திப்பு அருகே நடந்து சென்றார். அப்போது, இவர் மீது, வேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. துாக்கி வீசப்பட ரவி பலத்த காயமடைந்தார். அங்கிருந்தோர், இவரை மீட்டு, அருகில் உள்ள, தனியார் மருத்துவனையில் சேர்த்தனர். அங்கு, நேற்று இறந்தார். விபத்து குறித்து, பாண்டிபஜார் போலீசார் விசாரிக்கின்றனர்.கட்டட தொழிலாளி மீது மோதிய ஆட்டோபோரூர்: போரூர், வன்னியர் தெருவைச் சேர்ந்தவர், பெருமாள், 58; கட்டட தொழிலாளி. இவர், நேற்று காலை, 'டீ' கடைக்கு செல்ல, போரூர் - குன்றத்துார் சாலையை கடக்க முயன்றார். அப்போது, போரூர் நோக்கி சென்ற லோடு ஆட்டோ, பெருமாள் மீது மோதியது. பலத்த காயமடைந்த இவர், அருகில் உள்ள, தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு நேற்று உயிரிழந்தார். பூந்தமல்லி போலீசார் விசாரித்து, விபத்தை ஏற்படுத்திய, லோடு ஆட்டோ ஓட்டுனர், வெங்கடேசன், 24, என்பவரை, நேற்று கைது செய்தனர்.


லாரியை முந்த முயன்ற வாலிபர்


காசிமேடு: காசிமேடு பகுதியைச் சேர்ந்தவர், பாரதி, 30; தனியார் நிறுவன ஊழியர். இவர், இருசக்கர வாகனத்தில், காசிமேடு, ஜீவரத்தினம் சாலை வழியாக, நேற்று முன்தினம் நள்ளிரவு சென்றார். அப்போது, லாரியை முந்த முயன்ற போது, நிலை தடுமாறி கீழே விழுந்தார். லாரியின் பின்பக்க சக்கரத்தில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். காசிமேடு போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X