| மூத்தோர் தடகள போட்டி வரும் செப்., 22ல் துவக்கம் Dinamalar
மூத்தோர் தடகள போட்டி வரும் செப்., 22ல் துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
00:06

கோவை : மாவட்ட அளவில் மூத்தோர்களுக்கான தடகள போட்டி, நேரு ஸ்டேடியத்தில் வரும், செப்.,22ம் தேதியன்று நடக்கவுள்ளது.




கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்கம் சார்பில், மூத்தோருக்கான மாவட்ட அளவிலான தடகள போட்டி, பல்வேறு வயது பிரிவுகளில், 100மீ., 200மீ., 400மீ., 800மீ., உயரம்தாண்டுதல், நீளம்தாண்டுதல், ஈட்டிஎறிதல், நடை போன்ற பல்வேறு பிரிவுகளில் நடக்கவுள்ளன. முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகள், திருச்சியில் நடக்கவுள்ள மாநில போட்டிக்கு தகுதி பெறுகின்றனர்.




போட்டியில் பங்கேற்க விரும்பும் வீரர்கள், www.kdmaa.in என்ற இ- மெயில் முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். வரும், செப்., 1ம் தேதி முதல் நேரு ஸ்டேடியத்தில் நேரடியாகவும் பதிவு செய்யலாம்.இது குறித்து, கோவை மாவட்ட மூத்தோர் தடகள சங்க தலைவர் தெய்வசிகாமணி கூறுகையில், ''ஒரு நபர் மூன்று போட்டிகளில் பங்கேற்கலாம். மூன்றிலும் முதலிடம் பிடிக்கும் வீரர்கள், மாநில அளவிலான போட்டிக்கு, இலவசமாக அழைத்து செல்லப்படுவர். வரும் காலங்களில் தடகளம் போட்டிகள் தவிர, குழுப்போட்டிகளாக இறகுப்பந்து, செஸ் போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X