| 'கொடை' பூங்காவில் காட்டுமாடு சுற்றுலா பயணிகள் அச்சம் Dinamalar
'கொடை' பூங்காவில் காட்டுமாடு சுற்றுலா பயணிகள் அச்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
01:06

கொடைக்கானல் : கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் முகாமிடும் காட்டு மாடுகளால் சுற்றுலா பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.



கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் உள்ள சுற்றுச்சுவர்கள் சேதமடைந்துள்ளன. அருகிலுள்ள பாம்புச் சோலையிலிருந்து இரவில் வெளிவரும் காட்டுமாடுகள் பூங்காவில் உள்ள புல்வெளிகளில் மேய்வதற்காக நாள்தோறும் வந்து முகாமிடுகின்றன.நேற்று காலை 10:00 மணிக்கு பூங்காவில் முகாமிட்ட காட்டுமாடுகளை விரட்ட வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். காட்டுமாடுகள் அங்கும், இங்கும் ஒரு மணி நேரம் அலைக்கழித்து அருகிலுள்ள புதர்களுக்குள் சென்றது. அடிக்கடி பூங்காவினுள் முகாமிடும் காட்டுமாடுகளால் சுற்றுலா பயணிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.




அசம்பாவிதம் ஏற்படும் முன் பூங்கா வளாகச்சுவர்களை உயரமாகக் வேண்டும். தோட்டக்கலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''சுவர்களை சீரமைக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான பணிகள் துவங்கும்'' என்றார்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X