டிரைவர் கொலையில் 6 மாதத்திற்கு பின் கொலையாளி கைது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
01:15

வேடசந்துார் : வேடசந்துார் அருகே துாங்கிக் கொண்டிருந்த டிரைவர் கொடூரமாக கொலை செய்யப்பட்டது தொடர்பாக, ஆறு மாதங்களுக்குப்பின் கொலையாளியை போலீசார் கைது செய்தனர்.




வேடசந்துார் அருகே கெண்டைய கவுண்டனுாரை சேர்ந்தவர் டிரைவர் சவடமுத்து (எ) மொராஜ் 48. வேன்களை வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறார். இவருக்கு, பூங்கொடி, ஸ்ரீலட்சுமி என இரண்டு மனைவிகள், மூன்று குழந்தைகள் உள்ளனர்.ஆறு மாதங்களுக்கு முன் சவடமுத்து வேன்கள் நிறுத்தப்படும் பகுதியில் கட்டிலில் படுத்து துாங்கினார். காலையில் முகம் சிதைக்கப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார். டி.எஸ்.பி., சிவக்குமார் தனிப்படை அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தார். டிரைவர் சவடமுத்துவின் அலைபேசி தொடர்பில் உள்ள 200 பேரை பிடித்து விசாரித்தும் பலனில்லை.




அவரது அலைபேசிக்கு வந்த செல்வராணி என்பவரின் அழைப்பு குறித்து விசாரித்தார். செல்வராணியோ, 'எனது அலைபேசியில் இருந்து கணேஷ்மணி என்ற பெண்' பேசினார் என்றார்.கணேஷ்மணியிடம் விசாரித்த போது, ''எனக்கும், சவடமுத்துவுக்கும் 1998- கால கட்டத்தில் பழக்கம் இருந்தது. அது துண்டிக்கப்பட்டபின், அவர் இறப்பதற்கு முன்பு 4 நாட்களாக பேசினேன்'' என்றார். இதுபற்றி கணேஷ்மணியின் கணவர் குட்டை சவடமுத்துக்கு 46, தெரியவர அவர்களுக்குள் பிரச்னை எழுந்தது. ஆத்திரமடைந்த கணவர் குட்டை சவடமுத்து, டிரைவர் சவடமுத்துவை கொல்ல திட்டமிட்டார்.




டி.எஸ்.பி., சிவக்குமார் கூறியதாவது: கடந்த பிப்.,22ம்தேதி இரவு, கல்உடைக்க பயன்படும் சுத்தியலுடன் சென்ற குட்டை சவடமுத்து, துாங்கிக் கொண்டிருந்த டிரைவர் சவடமுத்துவின் தலையில் அடித்துக் கொலை செய்தார். பின் அங்குள்ள மினி டேங்கில் கை, கால் மற்றும் சுத்தியலை கழுவி விட்டு வீட்டுக்கு சென்றுவிட்டார். காலையில் போலீசார் சென்றபோது எதுவுமே தெரியாதது போல, கூடவே சென்று பார்த்துள்ளார். தொடர் விசாரணையில் இப்போது சிக்கினார், என்றார்.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X