| மின்மாற்றியில் தீப்பொறியால் அச்சம் Dinamalar
மின்மாற்றியில் தீப்பொறியால் அச்சம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

24 ஆக
2019
23:09

கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு அண்ணாநகர் குடியிருப்பு பகுதியில், டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி தீ பற்றி எரிவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.கிணத்துக்கடவு, அண்ணாநகர் பகுதியில் உள்ள குடிநீர் மேல்நிலைத் தொட்டி அருகே, மின்வாரிய டிரான்ஸ்பார்மரில் அடிக்கடி தீ பொறி பறப்பதும், பீங்கான் குமில்கள் சேதமடைவதும் வாடிக்கையாக உள்ளது.


தீப்பொறி பறக்கும் போது, இவ்வழியாக நடந்து செல்ல பொதுமக்கள் அச்சப்படுகின்றனர். அதனால், மாற்றுப்பாதையை மக்கள் அதிகம் பயன்படுத்துகின்றனர்.கடந்த இரண்டு மாதங்களாக கிணத்துக்கடவு பேரூராட்சி பகுதிகளில் புதிய டிரான்ஸ்பார்மர்களை மின்வாரியத்தினர் அமைத்து வந்தனர்.அப்போது, அண்ணாநகர் பகுதிகளிலும் மூன்று புதிய டிரான்ஸ்பார்மர்கள் அமைக்கப்பட்டுள்ளது.


ஆனால், தீப்பொறி பறக்கும் டிரான்ஸ்பார்மரை மாற்ற மின்வாரியத்தினர் நடவடிக்கை எடுக்கவில்லை.இந்நிலையில், நேற்று முன்தினம் மதியம், 2:00 மணிக்கு டிரான்ஸ்பார்மரில் தீப்பொறியுடன், தீயும் பற்றி எரிந்தது. இப்பிரச்னைக்கு, மின்வாரியத்தினர் நிரந்தர தீர்வு காண வேண்டும்.மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், 'டிரான்ஸ்பார்மர் வழியாக செல்லும் மின் கம்பியில், தென்னை மட்டைகள் விழும்போது, தீ பொறியும், தீ விபத்தும் ஏற்படுகிறது. உடனடியாக சரிசெய்யப்படும்,' என்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X